Monday 19 October 2015

ஆயுத பூஜை

ஆடம்பரத்திற்காக வாங்கப்பட்ட பொருள்கள்
அனைத்தும் தூசித்தட்டி கழுவி காயவைத்து
கொழு பொம்மையாக அடுக்கி வைக்கப்பட்டு
ஆயுத்தமாகிறது ஆயுதபூஜைக்கு..!


ஊர்மெச்சிட வாங்கிய பாத்திரங்கள்
எங்கோ ஓர் மூலையில் கிடக்க
பண்டிகை காலங்களில் மட்டும்
பளிச்சென்று பல்ளித்துக்கொண்டு கிடக்கிறது..!

என்றோ... தேவைக்காக வாங்கியவை
தேவையில்லாமல் முடிக்கி வைக்கப்படுகிறது
பயன்படுத்தவில்லை என்றாலும்
பார்வைக்காக பதிக்கி வைக்கப்படுகிறது
பாத்திரங்களும் காத்துதான் கிடக்கிறது
பண்டிகை எப்போது வருமென்று
அப்போதாவது வெளிச்சத்தை காணலாமே என்ற
நப்பாசைதான் அவைகளுக்கும்..!

பூஜைகளும் பண்டிகைகளும்
நம்மை மட்டுமல்ல
பழையனவற்றையும் சந்தோஷப்படுத்துகிறது..!

-துவரங்குறிச்சி வீ.சந்திரா.


No comments:

Post a Comment