Friday 23 October 2015

அரத்தை, அல்லி / மூலிகை மருத்துவம்

ஓமம்:

ஓமத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவாக மூன்று வேளைகள் உணவுக்கு முன் உட்கொள்ளவும். குழந்தைகளுக்கு தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவிட்டுக் கொடுக்கலாம். கழிச்சல், பால் கக்குதல், அசீரணம் குணமாகும்.


அத்தி:

அத்திப்பிஞ்சை தொடர்ந்து பச்சைப் பருப்பிட்டு சமைத்து உண்டு வர மூலம் தணியும். வயிறு தொடர்பான சிறு நோய்கள் குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் வலுவடையும்.

அரத்தை:
சளி, கோழைக்கட்டை நீக்குவதில் மிகச் சிறந்த மருந்து அரத்தை.
அரத்தையை புழுங்கலரிசி களைந்து நீரில் கழுவி உலர்த்தி மா போல் இடித்துக் கொள்ளவும். நூறு கிராம் பொடியை 300 கிராம் தேனில் குழைத்துக் கொள்ளவும். காலை, மாலை உணவுக்கு முன் அரைத் தேக்கரண்டி அளவாக உட்கொண்டு வர சளி இருமல் கோழைக்கட்டு நீங்கும்.

அல்லி:
அல்லி இதழ்கள் 100 கிராம் 500 மி.லி. நீரில் போட்டு இதழ்கள் குழையும் அளவுக்கு சிறுதீயாக எரித்து இறக்கி நன்கு ஆறவிட்டு, இரண்டு பங்காக்கி காலை பகல் உணவுக்கு முன் அருந்தி வர நீரழிவு நோய் குணமாகும்.

No comments:

Post a Comment