ஒருவருடத்திற்கு 12 மாதங்கள் என்று நாம் எல்லோருக்குமே தெரியும். அதற்கான காரணங்கள் உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு காரணப் பெயர் இருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
ஜனவரி என்பது வாயில்களுக்குக் கடவுளாகக் கருதப்படும் ஜனுஸ் என்னும் ரோமன் கடவுளின் பெயரிலிருந்து வந்ததாகும்.
ஜனவரியானது கிரேக்கர் காலக் கணிதத்தில் முதல் மாதமாகும். 31 நாட்களைக் கொண்ட 7 கிரேக்க மாதங்களில் ஒன்றாகும். அதன் முதல்நாள் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. பின்லாந்து நாட்டில் இம்மாதம் 'தம்மிக்கூ' அதாவது 'ஓக் மரத்தின் மாதம்' என்றழைக்கப்படுகிறது. ஜப்பானில் ஜனவரி மாதத்தின் இரண்டாவது திங்கட் கிழமையை அந்த ஆண்டு 20 வயது ஆனவர்களைக் குறிப்பிடும் வகையில் வயது வந்தவர்களுக்கான நாளாகக் குறிப்பிடுகின்றனர்.
பிப்ரவரி:
பிப்ரவரி என்னும் பெயர் கிரேக்கர்களின் புனிதப்படுத்தும் தெய்வமான பிப்ரூஸ் என்பதிலிருந்து வந்ததாகும். பிப்ரவரி என்பது கிரேக்கர்களின் காலக் கணிதத்தில் ஒரு வருடத்தின் இரண்டாவது மாதம் ஆகும். இந்த மாதம்தான் 28 அல்லது 29 நாட்களைக் கொண்ட சிறிய மாதமாகும். வருடங்களை நான்கினால் வகுக்க முடிந்தால் அந்த வருடம் லீப் வருடமாகும். அந்த வருடத்திலுள்ள பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்களும், வகுக்கப்படாத வருடங்களின் பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள் என்றும் கணக்கிடப்படுகின்றன. (100 ஆல் வகுக்கப்படும் வருடங்களைத் தவிர 400 ஆல் வகுபடுவதற்கல்ல) சில காலம் ரோமர்கள் குளிர்காலத்தை ஒரு மாதமாகக் கருதி வந்தனர். ரோமன் காலக் கணிதத்தில் ஜனவரியும், பிப்ரவரியும் இறுதியில் சேர்க்கப்பட்ட இரண்டு மாதங்களாகும்.
மார்ச்:
மார்ச் என்னும் பெயர் ரோமானியர்களின் போர்க் கடவுளான மார்சியஸ் என்பதிலிருந்து வந்ததாகும். கிரேக்கர்களின் காலக் கணிதத்தின் படி வருடத்திற்கு மூன்றாவது மாதம் மார்ச் மாதமாகும். இதற்கு 31 நாட்கள் உண்டு ரோமானியர்களின் காலக் கணிதத்தின் படி ஆதியில் மார்ச் வருடத்தின் முதல் மாதமாக இருந்தது. காரணம், குளிர் மாதங்களான ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் போர் செய்வதற்கு ஏற்ற மாதங்கள் அல்ல. அதனால் போர் செய்வதற்கு மார்ச் மாதம் அதிர்ஷ்டமான மாதம் என்று அவர்கள் கருதினர். மார்ச் என்னும் பெயர் சாக்ஸன் வார்த்தையான லெண்ட்மோனாத் என்னும் பெயரையும் உள்ளடக்கியதாகும். இதற்கு நீண்ட பகற்பொழுது என்று பொருளாகும். அதாவது சூரியன் பூமத்திம ரேகையைக் கடக்கும் பொழுது பகற்பொழுது அதிகரிப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டன் நாட்டினர் மார்ச்சை ஆரவாரமான அல்லது ஆர்ப்பாட்டமான மாதம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஏப்ரல்:
ஏப்ரல் என்பது வீனஸ்க்குப் புனிதமான தெய்வீக மாண்புகளினால் வந்த பெயராகும். கிரேக் காலக் கணிதத்தின்படி ஏப்ரல் மாதம் 30 நாட்களைக் கொண்ட ஒரு வருடத்தின் நான்காவது மாதம் ஆகும். இப்பெயர் எதிலிருந்து வந்தது என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது (ஏப்ரிலிஸ் - லத்தீன்) லத்தீன் வார்த்தை 'ஏப்பரிரே' என்பதற்கு மலர்வுறுதல் என்று பொருளாகும். இது மரங்களில் மலர்கள் மலர்வதைச் சுட்டுகிறது. இதனை வசந்த காலத்தைக் குறிப்பிடும் (மலர்வுறுதல்) கிரேக்க வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நன்கு புலனாகும். ஜேகப் கிரிம் என்பவர் ஏப்பர் அல்லது ஏப்ரஸ் என்னும் சொல் கிரேக்கர்களின் புராதனக் கடவுள் அல்லது தலைவரின் பெயர் என்று குறிப்பிடுகிறார். ஆங்கிலோ சாக்ஸன் இனத்தார் ஏப்ரலை ஒஸ்டர் - மனா அல்லது ஈஸ்டர் மனாத் என்றழைக்கின்றனர். இது புனிதமான மாதமாகும்.
மே மாதம்:
மே மாதமானது கிரேக்கர்களின் காலக் கணிதத்தின்படி ஒரு வருடத்தின் ஐந்தாவது மாதமாகும். இதற்கு 31 நாட்கள் உண்டு. ஜப்பானில் இந்த மாதம் சத்ஸுகி என்றழைக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களுக்கு வைக்கப்படும் பெயராகும். இதை பிணி மாதம் என்றும் அழைப்பார்கள். காரணம் மே மாதத்தில் மாணவர்களும், தொழிலாளர்களும் பள்ளி, கல்லூரி மற்றும் பணியில் சேர்கின்றனர். அதனால் அவர்கள் களைப்படையத் தொடங்குகின்றனர் என்னும் பொருளில் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். ஃபின்லாந்தில் இந்த மாதம் "டெளக்கோக்கூ" என்றழைக்கப்படுகிறது. இதற்கு விதைக்கின்ற மாதம் என்று பொருளாகும்.
ஜுன் மாதம்:
இப்பெயர் ரோமானியர்களின் பெண் தேவதையான "ஜூனோ என்பவளின் பெயராகும். ஜூபிடரின் மனைவி ஆவாள். கிரேக்கர்களின் பெண் தேவதையான "ஹீரா" என்பவளுக்கு இணையானவள் ஆவாள்.
ஜூலை:
இந்த மாதத்திற்கு ஜூலை என்னும் பெயர் ஜூலியஸ் சீஸரின் நினைவாக வந்ததாகும். அதற்கு முன்பு இதற்கு 'குவிண்டிலிஸ்' என்னும் லத்தீன் பெயர் இருந்தது. இது 'ஹீனாக்கூ' என்றழைக்கப்படுகிறது. இதற்கு களியாட்ட மாதம் என்று பொருளாகும்.
ஆகஸ்ட்:
ஐரிஷ் மொழியில் ஆகஸ்ட் என்பது 'லூனஸ' என்றறியப்படுகிறது. இது லுக்னஸத் என்பதன் இன்றைய விளக்கமாகும். இது 'லுக்' என்னும் கடவுளின் பெயராகும். அகஸ்டஸ் சீஸரை கௌரவப்படுத்த இந்த மாதத்திற்கு ஆகஸ்ட் என்று பெயரிடப்பட்டது. ஜூலை மாதத்திற்கு 31 நாட்கள் இருப்பதைப் போல் தன்னுடைய பெயரில் அமைந்த ஆகஸ்ட் மாதத்திற்கும் 31 நாட்கள் இருக்க வேண்டும் என்று அகஸ்டஸ் விரும்பினார். அகஸ்டஸ் இந்த மாதத்தை எட்டாவதாக வைத்ததற்கு அச்சமயம் கிளியோபாட்ரா இறந்ததுதான் காரணமாகும். இதற்கு அறுவடை மாதம் என்று பொருளாகும்.
செப்டம்பர்:
இப்பெயர் செப்டம் என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதற்கு ஏழு என்று பொருளாகும். செப்டம்பர் என்பது கிரேக்க காலக் கணிதத்தின்படி ஒரு வருடத்தின் ஒன்பதாவது மாதமாகும். மேலை நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் ஆரம்பமாவது இந்த மாதத்தில்தான்.
அக்டோபர்:
இப்பெயர் லத்தீன் வார்த்தை "ஆக்டோ" என்பதிலிருந்து வந்ததாகும். இதற்கு "எட்டு" என்று பொருள். கிரேக்க காலக் கணிதத்தின் படி அக்டோபர் என்பது ஒரு வருடத்தின் பத்தாவது மாதம் ஆகும். இதற்கு 31 நாட்கள் உண்டு ரோமர்களின் காலக் கணிதத்தின்படி இது எட்டாவது மாதமாகும். குளிர்காலமானது ஜனவரிக்கும் பிப்ரவரிக்கும் இடையில் பிரிக்கப்பட்டது.
நவம்பர்:
நவம்பர் என்பது 'நவம்' என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதற்கு ஒண்பது என்று பொருளாகும். நவம்பர் என்பது கிரேக்க காலக் கணிதத்தின்படி ஒரு வருடத்தின் பதினோராவது மாதமாகும். ஃபின்னிஷ் மொழியில் நவம்பர் மாதம் மாரஸ்கூ என்றழைக்கப்படுகிறது. இதற்கு மரித்தோரின் மாதம் என்று பொருளாகும்.
டிசம்பர்:
இப்பெயர் 'டிசம்' என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதற்கு பத்து என்று பொருள். ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 10 ஆம் நாளை மனித உரிமை நாளாகக் கொண்டாடுகிறது.

No comments:
Post a Comment