Wednesday 25 November 2015

என்கதை எழுதிட மறுக்குது என்பேனா


                  நான் சோகமான கருத்துக்களையே அதிகம் பதிவு செய்கிறேனாம்...! என்ன காரணம் என்று என்னிடம் பலர் கேட்டு இருக்கிறார்கள் ... சிலர் அவர்களாகவே சில காரணங்களை நினைத்துக்கொண்டு இப்படிதான் இருக்கும் என்று நம்புகிறார்கள்.


                 பொதுவாக எழுதுபவர்கள் அவரவர் சொந்த கதைகளை வைத்து பெரும்பாலும் எழுதுவதில்லை. அடுத்தவர்களின் நிலைை எண்ணிதான் பல பக்கங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. நான் பார்க்கின்ற, என் மனதை தொட்டவைகளை உள்வாங்கி அதில் என்னை உருவகப்படுத்தி எழுதுகிறேன். இதில் நான் வரவே இல்லை... உவமான உவமைகளை எடுக்கும்போது வேறொன்றை குறிப்பிடாமல் என்னை உருவகப்படுத்திக்கொள்கிறேன் அவ்வளவு தான்.

               சோகம் என்பது எல்லோரையும் கவருகின்ற ஒன்று. ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் சோகமாக எடுக்கின்ற படங்கள்தான் அதிக நாட்கள் ஓடுகிறது. சோகமான நாவல்கள்தான் நீண்ட நாள்களுக்கு நம் மனதில் நிற்கிறது.. சோகமான பாடல்கள் நாம் பாடல்கள் நாம் மெய்மறந்து கேட்பதுண்டு.. இதெல்லாம் ஏன் பிடிக்கிறது? ஏதோ ஒன்று நம்மை கவர்கிறது அவ்வளவுதான். காதலில் கூட சோகம் இருந்தால்தானே பல காலங்களுக்கு நாம் அதைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். நட்பில் துணையா இருந்த நண்பனைவிட துரோகம் செய்த நண்பன் கதைைதான் நாம் மனதில் வைத்திருக்கிறோம்.

                 சிலருக்கு சில விஷயங்கள் காரணம் இல்லாமலே பிடிக்கும் அப்படிதான் எனக்கும். நான் படித்ததில் சில வாசகங்கள் எனக்குப் பிடித்து இருக்கிறு அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவு தான். மற்றவைகளை எப்படி பார்க்கின்றீர்களோ அப்படிதான் இவையும். ஒன்றை ப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டால் இவரும் அதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை.

                    நாம் போடுகின்ற பதிவுகளை வைத்து அல்லது கருத்துகளை வைத்து இவர் இப்படி இருக்குமோ என்று நீங்களாக ஒன்றை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அது ஏந்தளவிற்கு அவரின் மனதை பாதிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. இல்லாத ஒன்றை இருப்பதாக நீங்களே நினைத்துக்கொள்ளாதீர்கள் இது மிகப் பெரிய மன உளைச்சலைத் தரும். அதிலும் நம் நம்பிக்கை க்கு உரியவர்கள், நமக்கு பிடித்தவர்கள், நம்மை நன்றாக புரிந்தவர்கள் இவ்வாறு கேட்கும்போது அதை வார்த்தையால் சொல்ல முடியாது அந்தளவிற்கு மன வருத்தத்தைத் தரும். இல்லாத ஒன்றை இருப்பதாக ஒருவர் நினைக்கும் போது அதைவிட ஒரு கொடிய விஷம் இந்த உலகில் எதுவும் இல்லை.

                  இதுபோன்று எழுதுபவர்களுக்கு நான் சொல்வது புரியும். "பேனா கத்தியைவிட பயங்கரனமான ஆயுதம் என்கிறார்கள். ஆனால் சில வேளைகளில் எழுதுபவனையும் பதம் பார்த்து விடுகிறது."
என்கதை எழுதிட மறுக்குது என்பேனா.... அதனால் என்ப்பற்றி இதுவரை நான் எழுதவே இல்லை ஏனெனில் எழுதவேயில்லை... ஹா.. ஹா... என் மனதிற்கு பிடித்தவைகளையே நான் பதிவு செய்கிறேன்.. இதில் சந்தோஷமென்ன? சோகமென்ன? இது.....நண்பர்களின் சிந்தனைக்கு

No comments:

Post a Comment