Thursday 19 November 2015

சட்டங்கள் அறிவோம்

பாலியல் குற்றங்கள்:

வன்புணர்ச்சி (Rape) பிரிவு 375

1. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக
2. பெண்ணின் சம்மதம் இல்லாமல்
3. பெண்ணை அச்சுறுத்தி அவள் சம்மதத்துடன்
4. கணவன் என்று தவறாக நம்பி அளித்த சம்மதம் என்பதை அறிந்திருத்தல்
5. பித்து நிலையனரின் சம்மதம்
6. 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதம் (அ) சம்மதமின்றி
7. மனைவி 15 வயதிற்குட்பட்டவர் இல்லாதபோது கொள்ளும் உறவு வன்புணர்ச்சி ஆகாது.

பிரிவு 376 (A) விவகாரத்து பெற்ற மனைவியிடம் அவரது சம்மதமின்றி உடலுறவு கொள்ளுவது வண்புர்ச்சியற்ற குற்றமாகும். தண்டனை 2 ஆண்டுகள் சிறை + அபராதமும்
பிரிவு 376 (B) பொது ஊழியர் தனது பதவியை அனுகூலமாகப் பயன்படுத்தி தனது கீழுள்ள ஊழியரின் ஆசையைத் தூண்டி பாலியல் உறவு கொள்ளுதல் வன்புணர்ச்சி குற்றமாகாத அத்தகைய உறவும் குற்றமாகும். தண்டனை 5 ஆண்டு+அபராதம்
பிரிவு 376 (C) சிறைச்சாலை பாதுகாப்பு இல்லம் சட்டத்தால் இயங்கும் வேறு இடங்களில் உள்ள பெண் தனது பதவி அனுகூலத்தைப் பயன்படுத்தி அவரைத் தூண்டி (அ)தீய நெறிக்கு இழுத்து அவளிடம் பாலியல் உடலுறவு கொண்டால் அச்செயல் வன்புணர்ச்சியல்லாத பாலியல் குற்றமாகும். தண்டனை 5 ஆண்டுகள் சிறை+அபராதம்.
பிரிவு 376 (D) மருத்துவமனையின் நிர்வாகத்தில் பங்கு கொள்ளும் எவராவது அங்கு பணிபுரியும் பெண்ணை தனது பதவி அனுகூலத்தால் கொள்ளும் உடலுறவு வன்புணர்ச்சியல்லாத பாலியல் குற்றமாக கொண்டு தண்டிக்கப்படுவார். தண்டனை 5 ஆண்டுகள் சிறை+அபராதம்.
பிரிவு 376 (1) வன்புணர்ச்சி செய்யும் எவரொருவருக்கும் 7 ஆண்டுக்கு குறையாத 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 361(1) ன்கீழ்

* காவல்துறை அதிகாரி செய்யும் வன்புணர்ச்சி
* பொது ஊழியர் செய்யும் வன்புணர்ச்சி
* கர்ப்பிணி என்று தெரிந்தும் செய்யும் வன்புணர்ச்சி
* 12 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் செய்யும் வன்புணர்ச்சி
* மருந்து நிர்வாக அதிகாரிகள் செய்யும் வன்புணர்ச்சி.
* இவர்களுக்கான தண்டனை 10 ஆண்டுக்கு குறையாத அளவிலும் ஆயுள் காலத்திற்கும் அனுபவிக்கும் கடுஞ்சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment