Thursday 19 November 2015

சட்டங்கள் அறிவோம்

தமிழகத்தில் சட்டங்கள் ஆயிரம் இருக்கிறது. ஆனால் அதன்படி நாம் நடப்பதும் இல்லை அதை செயல்படுத்துவதும் இல்லை. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வார்கள் இந்த சட்டங்கள் ஏட்டில் எழுதப்பட்டதாகவே தான் இருக்கிறது. அந்த சட்டங்கள்தான் என்ன அது என்னதான் சொல்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

இந்துச்சட்டம் ஒரு இனமுறைச் சட்டமே:

யார் இந்து?

தாய், தந்தை இருவரும் இந்து மதத்தினராக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை முறையான மணப்பிறப்புக் குழந்தையானாலும் (அ) முறையற்ற மணப்பிறப்புக் குழந்தையானாலும் இந்துக்களே ஆவர். பெற்றோர்களில் ஒருவர் இந்து மற்றொருவர் வேறொரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது குழந்தை எம்மதப்படி வளர்க்கப்படிகிறார்களோ அம்மதச்சட்டமே பொருந்தும்.
பௌத்தம், ஜைனம், சீக்கியம் போன்ற மதங்களும், பிரம்மசமாஜம், ஆரியசமாஜம், பிரார்த்தன சமாஜம் போன்ற பிரிவுகளும் லிங்காயத்தின் வீரசைவர்கள் ஆகியோரும் இந்து மதத்தின் கிளைப்பிரிவினர்களே ஆகையால் இவர்களுக்கு இந்து சட்டமே பொருந்தும்.

No comments:

Post a Comment