Friday 16 October 2015

வெந்தயம் / மூலிகை மருத்துவம்

வெந்தயம்

இது எந்த நோயை குணமாக்கும்?

விதை:
சிறுநீர்பெருக்கும், வறட்சியகற்றும், காமம் பெருக்கும்.


இலை(கீரை)

வெந்தயக் கீரையால், வயிற்றுப்பிசம், மாந்தம்  ஆகியவற்றை போக்கும்

வெந்தயம்:
இது பிள்ளை கணக்காய்ச்சல், சீதக்கழிச்சல், வெள்ளை, உடல் எரிச்சல், எலும்பைப் பற்றிய சுரம், நீர்வேட்கை, இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும் ஆண்மை தரும்.

கீரையுடன் கோழிமுட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் சமைத்துக் கொள்ள, இடுப்புவலி தீரும்.

வெந்தயத்தைத் தோசையாய்ச் செய்து விருப்பமுடன் புசித்து வந்தால், உடல் வன்மை பெற்றுப் பருக்கும். உடம்பின் வலி முதலியன நீங்கும். அதனை கருணைக் கிழங்கோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் நன்றாகப் பெருக்கும் இது உண்மை.

இதை வறுத்துப் பொடி செய்து, ஊறல் நீர் செய்து உட்கொள்ள வயிற்றுவலி, வயிற்று பொருமல், சுரம், உட்சூடு வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 10 கிராம் 100 கிராம் பச்சையரிசியுடன் சேர்த்துப் பொங்கி, உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். கஞ்சியில் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கப் பால் சுரக்கும்.

அறைத்துத் தலையிலப்பி ஊறவைத்துத் தலை முழுகிவர, தலைமுடி வளரும், முடி உதிர்வதைத் தடுக்கும்.


No comments:

Post a Comment