அன்புள்ள... "இல்ல வேணாம் ஹாய்... வச்சுக்கலாம் இல்ல வேணாம் ஹலோ... ம்ம் இது நல்லா இருக்கு இதே வச்சுக்கலாம்.." என்னாச்சு ஏன் இப்படினு நினைக்கீறீங்களா? கடிதம் எழுதி ரொம்ப நாளாச்சு எப்டி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை அதான் இத்தனை குளறுபடிகள். இப்பவும் காகிதத்தில் கடிதம் எழுதலாம் உங்க வீட்டில் இருப்பவர்கள் கூட சிரிப்பார்கள் எனக்கு வந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தேன் உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வந்தது நினைத்து பார்த்து சிரித்துக்கொண்டேன் ஹா... ஹா... ஹா... முன்பு கடிதத்தை தவிர வேற எதிலும் பேசமுடியாது ஆனால் பதில் வராது என்று தெரிந்தும் பக்கம் பக்கமாய் கடிதம் எழுதினோம்.
இன்று பேஸ்புக், டுவிட்டர்,வைபர், வாட்ஸ்அப் என்று பல வலைதளங்கள் இருந்தாலும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை சுருங்கிவிட்டது. எவ்வளவு... மாற்றம்? மாறியது வலைதளம் மட்டுமல்ல நாமும் தான் இல்லையா..? நம்மையே நாம் மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இன்று வலைதளங்கள் விரிந்து கிடக்கிறது வார்த்தைகள் இன்றி.
இப்படிக்கு,
யாரும் தீண்டாத காகிதம்
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/11/dh.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
உங்களது
Deleteபதிவுகளை அத்தனையும் அருமை. அதோடு வலைச்சரத்தில் எனது வலைப்பூவை
அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி இதயம் நிறைந்த நன்றிகள்