Wednesday, 29 July 2026

சுகிசிவம் அவர்கள் சொன்ன ஜோக்

ஒரு குட்டியான நகைச்சுவை கதை எப்பவோ கேட்டது சுகிசிவம் அவர்கள் சொன்னது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு நண்பர்கள் சந்தித்து கொண்டார்களாம், அந்த 
நண்பரை வரவேற்க வாசலிலே காத்திருந்து வந்தவுடன் கட்டித்தழுவி வீட்டுக்குள் 
அழைத்து போகும் போது அவரோட மகன் ஓடியாடி விளையாடி கொண்டு இருந்தானாம் வந்த 
நண்பரை அவனை பார்த்துவிட்டு சொன்னாராம் "அடடே... உம்பையனா? குண்டா 
கொழுகொழுன்னு  நல்லா இருக்கானே..." என்று சொல்லி வாய் மூடவில்லையாம் ஓடி 
வந்த பையன் 
கீழே விழுந்து கையை ஒடித்துக்கொண்டானாம் அப்பவே அவருக்கு மனதில் 
சுருக்கென்று தைத்ததாம் என்னடா இவன் சொன்னதும் இப்படி ஆச்சே என்று. 

அதன் பிறகு அந்த நண்பரை அழைத்து டைனிங் டேபில் அமர வைத்து வகை வகையாய் 
இலையில் சாப்பாடு, கூட்டு, பொறியல், பாயசாம், சுவிட், பழங்கள் என நிறைய 
வைத்து சாப்பிட சொன்னார்களாம் 
உடனே வந்த நண்பர் சொன்னாராம் "அடடே... சாப்பாடெல்லாம் அமர்க்களமா 
இருக்கே... தினமும் ஒரு நேரத்திற்கு இவ்வளவுமா சாப்பிடுறீங்க..?" 
என்றாராம். உடனே இவர் என்னாகுமோ தெரியலேயேன்னு நினைக்கும் போதே அங்கே 
வைத்திருந்த ஜக்கில் கை பட்டு சாப்பாட்டில் தண்ணீர் கொட்டிவிட்டதாம்.

அவருக்கு அப்போதே புரிந்து விட்டது இவர் இந்த மாதிரி எதிர்மறையான விஷயங்கள்
 சொன்னால் உடனே நடந்து விடுகிறதே என்று நினைத்தவர் இவரை வைத்து ஒரு நல்ல 
விஷயம் செய்வோம் நம்ம வயலில் நிறைய களை இருக்கிறது அதைப் பார்த்து எவ்வளவு 
களை இருக்கிறது என்று சொன்னால் களை மொத்தமும் அழிந்துவிடும் நமக்கும் களை 
எடுக்கிற கூலி மிச்சம் என்று நினைத்தப்படி 
சாப்பிட்டு முடிந்ததும் தன்னோட வயலுக்கு அழைத்து சென்றார். 

இந்த வயலைப் பாருங்க உங்களுக்கு என்ன தோணுது என்றார். வந்த நண்பர் உடனே 
சொன்னார் "இவ்வளவு களையிலும் இந்த பயிர் எப்படி செழிப்பா வளர்த்திருக்கு 
பாருங்க..." என்றாராம். 

அழைத்து வந்தவருக்கு பகிர் என்றதாம் அப்புறம் என்ன அந்த பயிர் விளங்கவா 
போகுது சர்வ நாசம் தான். இப்படியான நண்பர்கள் நம்மிடையும் இருக்கிறார்கள் 
இவர்களை கண்டால் நாம் விளகிதான் இருக்க வேண்டும். நண்பனுக்கு கஷ்டம் 
வந்தால் ஆறுதல் சொல்ல வேண்டும் அதற்காக இவ்வளவு கஷ்டத்திலும் நோய் நொடி 
இல்லாம நல்லா இருக்குறீயேன்னு சொன்னா எப்படி இருக்கும்.   

கல்லடி பட்டாலும் கண்ணடி படகூடாது என்று சும்மாவா சொன்னார்கள்.

- வீ. சந்திரா துவரங்குறிச்சி

No comments:

Post a Comment