என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (36)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (16)
- மருத்துவம் (25)
Tuesday, 4 August 2026
திருப்பதி போனால் திருப்பமாமே
திருப்பதிக்கு யாரும் அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியாதுன்னு பொதுவா எல்லோரும் சொல்வாங்க. சரி நாம போவோமேன்னு ஒரு பிளான் போட்டேன் திருப்பதி போனால் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் காலஹஸ்தி அப்ப திருப்பதி போகலாம்னு கூப்பிட்டா ப்ரண்ஸ் வருவாங்க காலஹஸ்தி என்றால் யோசிப்பார்கள் அதனால் திருப்பதி போகலாம்னு ப்ரண்ஸ் கிட்ட சொன்னேன் அவங்களும் ஓகே சொல்லியாச்சு நாங்களும் கிளம்பிட்டோம். இரயிலில் பயணம் அதுவும் ஆந்திரா போறோம் அடுத்த மாநிலத்துக்கு போறோம் இதுவரை தமிழ்நாட்டை தாண்டியது இல்லை அதுல ஒரு சந்தோஷம். இரயிலில் ஒருவழியா இடம் பிடிச்சு உட்கார்ந்தாச்சு மகளிருக்குன்னு ஒதுக்கப்பட்ட கோச் நாங்க உட்காருவதற்கு வசதியா இருந்துச்சு.
திருப்பதி போய் இறங்கியாச்சு கீழேயே தங்கும் விடுதி இருந்துச்சு ஐடி புரூப் காமிச்சு ரூம் எடுத்தாச்சு அப்போ அங்கே என்ன சொன்னாங்கன்னா கேமரா,போன் மேல கொண்டு போகாதிங்க உள்ளே அலோவ்டு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க நாங்களும் ரூம்லேயே வைச்சுட்டு போய்ட்டோம் திருப்பதி போய் ஒரு போட்டோ கூட எடுக்கல ஆனால் இப்ப பாருங்க ரீல்ஸ் வரைக்கும் அங்கே எடுத்துப் போடுறாங்க அது எப்படின்னு தெரியல.. நாங்க போனது 2013 ல் அப்ப அப்படித்தான் ரூல்ஸ்..
மலையில் நல்ல தார்சாலை தான் பஸ் வேன் எல்லாமே போகுது மலை ஏறுவதற்கு நிறைய வசதிகள் இருந்துச்சு ஆனால் என்னால் ஏனோ மேல ஏறுவது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சதுரகிரிக்கு போகுது எனக்கு அந்தளவுக்கு கஷ்டம் தெரியல கரடுமுரடான பாதை அதில் ஈசியா ஏழு மலை கடந்த எனக்கு இந்த திருப்பதி ஏழு மலையில் ஏற முடியல காரணம் தெரியல ஒரு வேளை நாம சிவ பக்தை என்று பெருமாளுக்கு தெரிஞ்சிடுச்சோ என்னவோ.. எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை மனசுக்குள்ள கஷ்டமா இருந்துச்சு காரணம் தான் புரியல பொதுவா கோவில்களுக்கு போனால் மனசு லேசாகும் ஆனால் திருப்பதி போன போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு காரணம் புரியல சந்தோஷமே இல்லாம போறேன் என் கூட வந்தவர்கள் நல்லா ஜாலியா கோவிந்தா.. கோவிந்தா... ன்னு கோஷம் போட்டுக்கோண்டே முன்னேறி செல்கிறார்கள் என் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட கோவிந்தான்னு வரல..
அங்கே ஒவ்வொரு அறையாக அடைத்து அடைத்து போட்டு திறந்துவிடுவார்கள் நம்முடைய பாவங்கள் போகும் என்பது ஐதீகம் நாங்களும் அவ்வாறே சென்றோம் ஆனால் அளவு கடந்த கூட்டம் 300 ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றோம் ஒருவழியா சாமிய பார்க்கிற நேரம் வந்துச்சு ஆரத்தி காட்டப்போற சமயத்தில் ஒரு போலீஸ் என்னை இழுத்து அந்த பக்கம் விட்டாங்க பாருங்க என்னால ஆரத்தி சரியா பார்க்க முடியல. ஆனால் என் கூட வந்தவங்க ஆரத்தி நல்லா பார்த்தாங்க ஆனால் எனக்கு.மலை ஏறவும் கஷ்டமா இருந்துச்சு அதே மாதிரி தரிசனமும் கிடைக்காமல் போச்சு.. அப்புறம் அடிச்சு புடிச்சு லட்டு வாங்கிட்டு சில படங்கள் வாங்கிட்டு கீழே இறங்கிட்டோம்.
ரூமிற்கு போகும் போது என் ப்ரண்ட்க்கு ஒரு போன் வந்துச்சு காலேஜ்ல இருந்து நாளைக்கு உடனே காலேஜ் வரணும் என்று.. நானோ காலஹஸ்தி போகனும்னு நினைச்சிட்டு இருக்கேன் அந்த நேரத்தில் இப்படி ஒரு போன் அந்தபுள்ள உடனே கிளம்பி ஆகனும்னு அழுவுது அப்புறம் அவசரமா கிளம்பிட்டோ காலஹஸ்தி போகல.. பஸ் பிடிக்க பஸ் ஸ்டாண்ட் வந்தா அங்கே ஏதோ கலவரம் வந்து பஸ் போகாதுன்னு சொல்லிட்டாங்க கடைசியா ஒரு பஸ் எடுத்துச்சு அந்த பஸ்ல ஏறி வேற ஒரு ஊர் போய் அதன் பிறகு அங்கிருந்து பஸ் பிடிச்சு ஊருக்கு வந்தோம்.. திருப்பதி போய் வந்தால் திருப்பம் என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு மொட்டையாச்சு பொருளாதார சிக்கல் கையில் காசு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டேன் அதன் பிறகு நான் வாங்கி வந்த பெருமாள் படங்களை என் பூஜை அறையில் இருந்து அகற்றினேன் அடுத்ததா இனி எந்த பெருமாள் கோவிலுக்கும் போகவே கூடாதென்று முடிவெடுத்தேன் ஆனால் சனிக்கிழமை அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தேன் திருப்பதி போனால் சனிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க அதை மட்டும் கடைப்பிடிக்கிறேன்..
இது என்னுடைய திருப்பதி அனுபவம் என்ன மாதிரி திருப்பதி போய் வந்து மொட்டையானவங்க யாராவது இருக்குறீங்களா? அதாவது எனக்கு சரியில்லை என் கூட வந்தவங்களுக்கு நல்லாதான் முன்னேற்றம் இருந்துச்சு.. நம்ம ராசிக்கு திருப்பதி ஒத்துவரல அவ்வளவுதான்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment