Friday, 16 September 2016

போராட்டத்தின் பயன் என்ன?

பந்த் என்ற பெயரில் கடைகளை முடுவது, பஸ்கள் ஓடாமல் நிறுத்தவது இதில் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அரசுக்கும் மக்களுக்கும் நஷ்டம் தான் கிடைக்கும். இதையே இரண்டு நாளைக்கு மின்சாரத்தை நிறுத்தி போராட்டம் செய்யுங்கள் ஏதாவது பலன் கிடைக்கும். இதனால் மின்சாரம் சேமிக்கப்படுவதோடு மக்கள் அதனால் ஏற்படு கஷ்டங்களை உணர்வார்கள்.


மின்சாரம் தண்ணீரில் இருந்துதானே எடுக்கிறார்கள் இப்போ நீரின் அவசியம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல கார்ப்ரேட் கம்பெனி முதல், கடைநிலை மக்கள் வரை நீரின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். ஏனெனில் காலையில் சட்னி அரைப்பதில் தொடங்கி மாலையில் ஹக்கூஸ் போறவரைக்கும் தண்ணீரும் மின்சாரமும் தேவைப்படுறது என்பதை உணர்வார்கள். அதுமட்டுமல்ல அனைத்து இளைஞர்களும் இப்போது ஆன்லைனில்தான்இருக்கிறார்கள் . மின்சாரத்தை இரண்டு நாட்களுக்கு தடை செய்தால் மின்சாரத்தின் அவசியத்தை உணர்வார்கள்.

நாம் செய்கின்ற போராட்டத்திற்கும ஒரு அர்த்தம் கிடைக்கும் அதைவிடுத்து. கடைகளை மூடி பஸ்களை தடை செய்வதால் தமிழ்நாட்டுக்கு மேலும் நஷ்டத்தைதான் ஏற்படுத்துகிறோமே தவிர அதில் எந்த பயனும் இல்லை. சிந்தியுங்கள் எது நன்மை பயக்குமென்று...!

1 comment:

  1. பந்த் ஆதரவாளர்கள் 10 சதவீதம்கூட இருக்க மாட்டார்கள். மற்றவர்கள் அவர்களின் வன்முறைக்கு பயந்துதான் கலந்து கொள்கிறார்கள். எந்த விஷயத்திற்கும் பந்த நடத்தக்கூடாது. மீறி பந்த் நடத்தக்கோரும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு தேர்தலில் பங்கேற்க தடைவிதிக்கவேண்டும்.

    ReplyDelete