தேவையான பொருட்கள் :
இறால் - 1/2 கிலோ
தக்காளி - 1
பீர்க்கங்காய் - 1 கப்
பூண்டு - 6,7பல்
இஞ்சி -சிறு துண்டு
சோம்பு - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் -2
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் தூள் - சிறிது
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், தக்காளி வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும். சோம்பு, பூண்டு, இஞ்சி இவைகளை அரைத்து வைத்துக்கொள்ளவும் (அரைக்காமல் பொடியாக நறுக்கியும் சேர்த்துக்கொள்ளலாம்) .
இப்போது வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சோம்பு, வெங்காயம் கறிவேப்பிலை,பச்சை மிளகாய்ப தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும் ( வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள் வெங்காயமும், தக்காளியும் நன்கு வதங்கி பேஸ்ட் போல் வரும் இறாலின் சுவையை கூட்டும்) இறால் , பீர்க்கங்காய் , மஞ்சள்தூள் சேர்த்து அந்த கலவையோடு வதக்கவும் தண்ணீர் ஊற்ற தேவையில்லை பீர்க்கங்காயில் தண்ணீர் இருக்கும். இப்போது அரைத்த இஞ்சி, பூண்டு, சோம்பு விழுதை சேர்க்கவும். பிறகு சிறிது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள சுருள வதக்கி இறக்கவும்.
இப்போது சுவையான மணமான பீர்க்கங்காய் இறால் தொக்கு ரெடி.

No comments:
Post a Comment