Tuesday 12 June 2018

யார் தமிழன்?

          இன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக்கிறார்களோ அவர்கள் தான் ஹீரோ... அந்த காலக்கட்டம் மாறிவிட்டது. சினிமாவில் நடித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் அதை வைத்து நிறைய உதவிகள் செய்யலாம். ஆனால் அந்தளவுக்கு யாருக்கும் மனசு இருப்பதில்லை. சில பேர் கொஞ்சம் வசதி இருந்தாலே இல்லாதவங்களுக்கு படிப்போ சாப்பாட்டிற்கோ கஷ்படுறவங்களுக்கு உதவி செய்ய முன் வருகிறார்கள் ஆனால் பணத்தை கட்டி வைத்திருப்பவர்களுக்கு அந்தளவுக்கு மனசில்ல அதனால்தான் சிலர் மீது நமக்கு மிகுந்த கோபம் வருகிறது ஆத்திரம் வருகிறது அவரோடும் இவரோடும் ஒப்பிட்டும் பேசுறோம் திட்டுறோம் இது எல்லாரையும் நாம் சொல்வதில்லை ஒரு சில பிரபலமானவர்களைதான் இதற்கு காரணம் இருக்கிறது. சில கேட்கிறார்கள் அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சான் அவன் ஏன் மக்களுக்கு கொடுக்கணும்னு கேட்கிறான் நல்ல கேள்விதான் அதே நேரத்தில் அவனைவிட வசதியில் குறைந்தவன் மக்களுக்கு செய்கிறானே அவன் என்ன இளிச்சவாயனா? நமக்கு கேட்கத்தோணுவதில் தவறு இல்லையே..?


என் மனதில் ஆயிரம் கேள்விகள் மனதில் எழுகிறது இப்படி
அப்ப இருந்து இப்பவரைக்கும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி ஆனால் இதுவரைக்கும் ஒரு படத்தில் கூட மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொன்னது கிடையாது அப்படி சொல்லக்கூடிய படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் இருக்கிறது. அதோடு சிறந்த நடிக்கருக்கான எந்த விருதும் வாங்கியதில்லை அப்போ நல்ல நடிகரும் இல்லை என்று நிரூபணம் ஆகிறது. பாடத்தெரியாது, ஆடத்தெரியாது, கதை திரைக்கதை எதுவும் தெரியாது. அவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் 40 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன் நான் பச்சை தமிழன் என்கிறார் ஆனால் இதுவரை அந்த தமிழை சரியாக பேசியதில்லை. பி. சுசிலா, எஸ், ஜானகி, சித்ரா, எஸ்.பி.பி. இவர்களெல்லாம் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆனால் அவர்கள் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்தவர்களைப் போல மிக அழகாக பேசுகிறார்கள். அவர்களை பற்றி அறியும் போதுதான் இவர்கள் தமிழ்நாட்டவர் அல்ல வேறு மொழி வேறு இனம் என்று தெரிந்து ஆச்சரியப்பட வைக்கிறது ஆனால் இவர்களுக்கு அத்தனை வெகுமதி நாம் கொடுத்தது இல்லை. தெலுங்கு நடிகர்கள், மலையாள நடிகர்கள், ஏன் கன்னட நடிகர்கள் கூட தமிழை அத்தனை அழகாக பேசுகிறார்கள் ஆனால் தன்னை பச்சை தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ரஜினியால் ஏன் அப்படி பேச முடியவில்லை இத்தனை தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தமிழ்நாட்டிலே வசிக்கிறார் இருந்தும் அவரால் தமிழை சரியாக உச்சரிக்க தெரியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. புதிதாக தமிழ் கற்றுக்கொண்டவர்களின் பேச்சு எப்படி இருக்குமோ அப்படிதான் இன்று வரை இருக்கிறது அவரது பேச்சு. இதைதான் சிலர் அவரது ஸ்டைலு என்கின்றனர் அது என்ன ஸ்டைலோ எனக்குத் தெரியவில்லை. எந்த ஒரு நாட்டுக்காரனும் தன் தாய்மொழியையும் தன் மண்ணையும் விட்டுக்கொடுக்க மாட்டான் நாம எந்த ஊருக்கு பிழைக்கப் போனாலும் சரி அங்க உள்ள மொழிகளை கற்றுக்கொண்டாலும் சரி நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம் ஆனால் "ரஜினி அவர்கள் ஒரு கன்னடரா இருந்து கொண்டு நானும் தமிழன்தான் என்பது வியப்பாக இருக்கிறது. எப்படி இவரால் அப்படி சொல்ல முடியும்? அது அவரின் மண்ணுக்கும், மொழிக்கும்,  இனத்திற்கும் செய்யும் துரோகம் அல்லவா?" தமிழ் மீது பற்று இருக்கிறது என்று சொல்லலாம், எனக்கு பிடிக்கும் என்று சொல்லலாம், நான் விரும்புகிறேன் என் கூட சொல்லலாம் ஆனால் நான் தமிழ்நாட்டில் இருப்பதால் நானும் பச்சை தமிழன் என்று சொல்வது நம்மை ரொம்ப யோசிக்க வைக்கிறது. ஏன் இவ்வாறு சொல்கிறார் என்று சிந்திக்க வைக்கிறது இதற்கு என்ன காரணமாக இருக்குமென்று ஆராய வைக்கிறது. ஏனெனில் யாரும் அப்படி சொல்ல தயங்குவார்கள் இவர் அப்படி சொல்லும் போதுதான் சந்தேகம் கூடுகிறது ஏன் தெரியுமா? இவர் உண்மையில் தமிழையும் தமிழ் மண்ணையும் நேசிப்பவராக இருந்தால் தமிழையாவது ஒழுங்கா பேச வேண்டும் இலக்கியம் கற்க வேண்டாம், கவிதை நடையில் பேச வேண்டாம் எழுத கூட வேண்டாங்க முதலில் அழுத்தம் திருத்தமாக பேச சொல்லுங்கள் பார்ப்போம் நாங்கள் இவர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறோம். நமக்கு ஒரு படம் பிடித்தால் அதை ஆயிரம் தடவை பார்ப்போம், அதே மாதிரி நடப்போம் அதே மாதிரி சிரிப்போம் நடை உடை பாவனை கூட அப்படியே இருக்கும் இவ்வளவு ஏன் இவரை மாதிரியே எத்தனை தமிழன் பேசுறான் ஆனால் இவரால் ஏங்க தமிழை சரியா பேச முடியல? அப்ப தமிழ் மீது இவருக்கு பற்று இல்லை என்றுதானே அர்த்தம்.

சரி இதெல்லாம் விடுவோம் ரஜினியையும் கமலையும் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கே. பாலச்சந்தர் அவரே இதே போன்ற பல கேள்விகளை நேரிடையாகவே கேட்டு இருக்கிறார் மேடையில். கமல் அதிகம் படிக்கவில்லை  நாத்திகவாதி ஆனால் மந்திரங்களையும், பதிகங்களையும் பிழை இல்லாமல் சொல்லக்கூடியவர். எங்கே ரஜினி ஆன்மீகவாதி அடிக்கடி இமயமலை செல்கிறார் என்று பெருமையாக சொல்கிறார்கள் எங்கே அவருக்கு ஏதாவது ஒரு பதிகம் தெரியுமா? கடவுள் மீது பற்றுக்கொண்ட அவர் எங்கே ஒரு மந்திரமாவது உச்சாடனம் செய்ய சொல்லுங்கள். தமிழ் மொழியில் வேண்டாம் கன்னடத்திலே தெரியுமா என்று கேளுங்களேன். நாத்திகவாதியான கமலுக்கு எப்படி தெரிகிறது ? சிந்திக்க வேண்டிய விஷயம் கமல் தமிழ் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவர் சில புத்தகங்கள் எழுதியிருக்கிறார் ஆடல் ,பாடல் ,திரைக்கதை ,வசனம், இசை தயாரிப்பு ஆகியவற்றில் சிறந்தவர் ஆனால் இந்த உலகம் பாருங்கள் இவருக்கு இரண்டாம் இடமே கொடுத்திருக்கிறது. பல திறமைகளை கொண்ட இவருக்கு இரண்டாவது இடம் எந்த திறமையும் இல்லாதவருக்கு முதல் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் இது எப்படி சாத்தியமாயிற்று எனக்கு புரியவே இல்லை அப்போ திறமைசாலிகளுக்கு இங்கே மதிப்பு இல்லை என்றே தெளிவாக புரிகிறது. கமல் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர் மன்றங்கள் இதுவரை மக்களுக்கு செய்தது என்ன? இப்போது அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார். அவர் வாய் திறந்தால் ஏன் இத்தனை பிரச்சினை வருகிறது? அவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? ஒரு பழமொழி சொல்வார்கள் மொச பிடிக்கிற மூஞ்சை பார்த்தா தெரியாதான்னு ஏன்னா யார் அள்ளி கொடுப்பார்கள் யார் கிள்ளி கொடுப்பார்கள் என்று உலகத்திற்கே தெரியும். அதனால்தான் தெரிந்தவர்கள் வேண்டாம் என்று மறுக்கிறார்கள் அவர் நடிகராவே இருந்துட்டு போகட்டுமே இத்தனை நாட்களாக மக்களுக்கு செய்ய முடியாதததை அரசியலுக்கு வந்துதான் செய்ய வேண்டுமா? நல்லது செய்ய பதவி தேவையில்லை பணம் இருந்தால் போதும் குணம் இருந்தால் போதும். புகழும் பணமும் இருக்கே இதைவிட வேறென்ன வேணும். இதைதான் மக்கள் சொல்கிறார்கள் அவர் புரிந்துக்கொண்டால் சிறப்பு.

ரஜினியை தாழ்த்தி பேசவில்லை உண்மையை சொல்கிறோம் அவ்வளவே இதனால் கமலை எங்களுக்கு பிடிக்கும் என்று அர்த்தமில்லை இது ஒப்பீடுதான் அப்போதுதான் சிலருக்கு புரியும். இருவருமே சினிமாவில் போட்டியாளராக இருந்தார்கள் இப்போ அதே போன்று அரசியலிலும் போட்டியாளராக வந்திருக்கிறார்கள் அதை வைத்து சின்னதா ஒரு கருத்து கணிப்பு செய்திருக்கிறோம். ரஜினி ஆன்மீகவாதி கமல் நாத்திகவாதி ஆனால் இவரின் குணங்கள் செயல்கள் மட்டும் இடம் மாறிக்கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆன்மீகவாதியிடம் இருக்க வேண்டியவை நாத்திகவாதியிடம் நிறைந்து கிடக்கிறது என்பதே உண்மை இதை அனைவருமே அறிவர். இன்னும் சொல்வதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுக்கள் உதாரணங்கள் இருக்கிறது ஆனால் மேற்சொன்ன இந்த சின்ன வேறுபாடே போதுமென்று நினைக்கிறேன். பதவி இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய மட்டும் ஆட்கள் இல்லை. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய போகிற அந்த தலைவன் யார்?

No comments:

Post a Comment