Friday, 10 February 2017

தமிழ்நாட்டில் எது குற்றம்?

ஜெயலலிதாவை 75 நாட்கள் யாரையும் பார்க்கவிடாது வைத்திருந்தது குற்றமில்லை...



அரசு சார்பில் வந்த கவர்னர், மத்தியரசு மந்திரிகள் போன்றவர்கள் ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்தது குற்றமில்லை.....

அரசியல் தலைவர்கள், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கூட பார்க்கவிடாமல் தடுத்து ஒரு குற்றமில்லை....

(அதென்ன சசிகலா குடும்பம் மட்டும் பார்க்க அனுமதி அது எப்படி...? ஏன்? இதுவரை அதற்கு காரணம் சொல்லாமல் இருப்பது ஏன்..?)

எந்த பதவியும் நான் வகிக்க மாட்டேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு ஆட்சியை பிடிக்க நினைப்பது குற்றமில்லை....

சட்டமன்ற உறுப்பினர்களை எங்கோ மறைத்து வைத்திருப்பது குற்றமில்லை...

எதிர் கட்சி தலைவரை பார்த்து சிரித்தது ஒரு குற்றமாம்....

எந்த சுவற்றில் முட்டிகிறதுன்னே தெரியல...

நடப்பவை எல்லாம் பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்தியரசு இருக்கிறதே.... இதைவிட சட்ட ஒழுங்கீனம் எதுவும் இல்லை.......

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக உலகமே சொல்கிறது. ஆனால் அதனை விசாரிக்க யாருக்கும் தைரியம் இல்லை...

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்தியரசு உளவுத்துறையை அனுப்பி போராட்டத்தின் ஆணிவேர் எதுன்னு கண்டுபிடிக்க வந்ததே... ஒரு தமிழ்நாட்டின் முதல்வர் இறந்திருக்கிறார் அதை கண்டு பிடிக்க ஏன் உளவுத்துறை அனுப்பவில்லை... அப்ப எல்லாருமே கூட்டு களவானிகள்தானா...?

#இதுதமிழ்நாடா_இல்ல_வெறுங்காடா

2 comments:

  1. மத்திய அரசின் மாநில பிரதிநிதியான கவர்னரை பார்க்க விடாது, மத்திய அமைச்சர்களையும் பார்க்க விடாது தடுத்து திருப்பி அனுப்பிய சசி மாநில அளவில் கூட எந்த பதவியையும் வகிக்காதவர். அவரால் அப்படி கவர்னரையும் மத்திய அமைச்சர்களையும் திருப்பி அனுப்ப முடிகிறதென்றால் காதில் பூவை சுற்றிக்கொண்டு தமிழகம் என்றோ தனி நாடாகிவிட்டதென்று நம்பி தொலைப்போம்.
    சரி அப்படியே கவர்னரை திருப்பி அனுப்பியதாக வே வைத்து கொள்வோம்.
    அவர் வெளியில் வந்து என்ன சொன்னார்? முதல்வரை தான் பார்வையிட்ட தாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் மீடியாக்களுக்கும் மக்களுக்கும் சொல்ல வில்லையா ?
    அப்போ கவர்னர் சொன்னது பொய்யா?
    கவர்னர் ஏன் பொய் சொல்ல வேண்டும்?
    தன்னை பார்க்க விட வில்லை என உ ண்மையை ஏன் சொல்ல வில்லை?

    ReplyDelete