வணக்கம் நட்புக்களே....
நான் வெளிநாட்டில் உற்பத்தியாகும் எந்த பொருளையும் பயன்படுத்துவதில்லை. கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்களை நான் தொட்டு கூட பார்ப்பதில்லை. இன்று வரை கடலை எண்ணெய்யில் தான் சமையல் செய்கிறேன். பீட்சா, பார்க்ஹர் எதுவும் சாப்பிட்டதில்லை. காய்கரி சந்தையில்தான் காய்கரிகறி வாங்குகிறேன். குளிரூட்டும் அறையில் எந்த கடையிலும் நான் பொருட்கள் வாங்குவதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு அதில் உள்ள நல்ல சத்துக்கள் போய்விடுகிறது. அதனால் நான் அதை தவிர்த்து வருகிறேன். நான் சிறுவயதில் என்ன சாப்பிட்டேனோ அதைதான் இப்போதும் சாப்பிடுகிறேன்.
எனக்கு விவரம் தெரிந்து எனக்காக மூன்று முறை மருத்துவமனை சென்றுள்ளேன். 1998ல் ஒருமுறை நல்ல காய்ச்சல் அப்போது சென்றேன், அதன் பிறகு 2013 ல் காய்ச்சல், வாந்தி, வயிற்றுபோக்கு இவை மூன்றும் சேர்ந்து வந்தது அதற்கு காரணம் நூடுல்ஸ் சாப்பிட்டதால் மட்டுமே... நூறு ரூபாய்க்கு சில்லறை மாற்ற போய் அந்த மேஹி யை 5 ரூபாய்க்கு வாங்கி ரூபாய் 2000 செலவு செய்தேன். அன்றிலிருந்து கருமத்தை நினைத்தாலே வாந்தி வருகிறது. அதன் பிறகு இது வரை எந்த ஒரு வியாதியும் என்னை நெருங்கியது இல்லை அதற்கு காரணம் நான் நம் நாட்டு உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதால் தான்.
ரொம்ப தாகமா இருந்தால் இளநீர் வாங்கி குடிப்பேன். ஏதாவது சாப்பிடனும்னு அசை வந்தால் கடலை வகைகள் கிடைக்குதான்னு பார்ப்பேன் அதை வாங்கி சாப்பிடுவேன். மற்றபடி வேற எதும் நான் சாப்படுவது கிடையாது. நான் சாப்பிடுகிறவை எல்லாமே இங்கே கிடைக்க கூடியவை இவைதான் எனக்கும் பிடிக்கிறது. நொங்கு, பனங்கிழங்கு , வேர்கடலை, இளநீர், இவைகளைதான் அதிகம் எனக்கு பிடிக்கிறது ஏன் என்று எனக்கும் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள் உனக்கு என்ன பிடிக்கும் என்று நான் எதுவும் பிடிக்காது என்று சொல்லியது உண்டு ஏன்னா இதை அவர்கள் தேடி பிடித்து வாங்குவது கஷ்டம் என்பதால் மறுத்துவிடுவேன்.
சின்னதா எப்பாவது ஒரு தலைவலி, ஜலதோஷம் இப்படிதான் வந்தததுண்டு அது நமக்கு வருவது இயல்பு. 2015 ல் எனக்கு சிறுநீரக கல் இருந்தது அதற்கு காரணம் நான் நிறைய தண்ணீர் குடிக்க மாட்டேன், இரண்டாவது பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதும் சரி, வேலைக்கும் செல்லும் போது சரி காலையில் போனால் மாலையில் வீடுவந்துதான் சிறுநீர் கழிப்பது வழக்கம் அதனால் 99% சிறுநீரக கல் உருவாகி இருக்கலாம் என்பது என் கருத்து.. அப்ப நான் என்ன செய்தேன் என்றால் ஒரு நாளைக்கு 3 இளநீர் ஒரே நேரத்தில் குடிப்பேன் இப்படி ஒரு வாரம் குடித்தேன் என்ன அதிசயம் 3 சிறுநீரக கல் வெளியே வந்தது. நான் ஹாஸ்பிட்டல் செல்லவில்லை, மருந்து மாத்திரைகள் எடுக்கவில்லை சாதாரண இளநீரில் குணமாச்சு... ஆனால் சில பேருக்கு அது தெரிவதேயில்லை...
2008 ல் இருந்து ஒரே தும்மலாக வரும் பிறகுதான் தெரிந்ததது அது சைனஸ் என்று அது ஏன் வந்தது என்றால் அலுவலகத்தில் ஏசி அறையில் இருக்கிறேன் அதனால் எனக்கு சைனஸ் வந்தது. எல்லோரும் சொன்னார்கள் இது குணமாகாது சர்க்கரை நோய் போல் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றார்கள். நான் என்ன செய்தேன்.. சீரகம், மிளகு, பட்டை, லவங்கம் நான்கையும் சம அளவு எடுத்து கொதிக்க வைத்தய 1/2 டம்ளர் குடித்து வந்தேன். இப்ப சைனஸ் எனக்கு இல்ல ஓடியே போச்சு... இப்படிதான் செயற்கையா வரும் நோய்களுக்கு இயற்கையா நம்மிடம் மருந்திருக்கு அதை யாரும் நம்புவதும் இல்லை அதை செய்து பார்ப்பதும் இல்லை. நான் நிறைய பேரிடம் இது பற்றி சொல்லியிருக்கிறேன் வலைதளங்களிலும் பதிவு செய்திருக்கிறேன் அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை
நான் இது பற்றி சொல்லும் போது சிலர் நீ என்ன பெரிய கிளவி மாதிரி சொல்லிட்டு இருக்க என்பார்கள்... அதாவது கை வைத்தியம் கூட கிளவிகள் தான் சொல்வார்களா என்ன இளைவர்கள் சொன்னால் அது மருந்தில்லையா... இப்படி சிலர் நம்மிடையே அதனால் நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் நான் எனக்கு தேவையான மருந்துகளை நானே தயாரித்து கொள்கிறேன்.. நான் இப்பவும் ஆரோக்கியமா இருக்கிறேன். அதற்கு காரணம் நான் இன்னும் பழமை மாறாமல் பத்து வருஷத்திற்கு முன்னாடி என்ன சாப்பட்டேனோ... நான் குழந்தையா இருக்கும்போது என்ன எனக்கு பிடிச்சதோ அதைதான் இப்பவும் சாப்பிடுறேன்... நோய் நொடியில்லாமல் வாழ்றேன்... நீங்களும் புது விளம்பரங்களை கண்டு நவநாகரிகத்தை கண்டு வெளிநாட்டு பானங்களையோ, உணவுகளையோ சாப்பிட்டால் அதற்கான பின் விளைவுகளை நீங்க சந்திக்க நேரிடும். வெளிநாட்டு உணவு அந்த நாட்டில் வசிப்பவர்களுக்கு ஒத்துக்கொள்ளும் நமக்கு அது ஏற்காது, அதோடு வெள்ளைக்காரன் கூட இங்கே வந்து நம்ம நாட்டு புளியோதரை, பொங்கல், தயிர்சாதம், சாம்பார் சாதம் நல்லா இருக்குன்னு சாப்பிடும் போது நீங்கள் ஏன் எதையோ வாங்கி சாப்பிடுகிறீர்கள்...?
நம்ம தமிழ்நாட்டில் மட்டும்தான் தரமான, சுவையான,ஆரோக்கியமான, உணவு கிடைக்குது சிலர் இது கிடைக்கலையேன்னு வருத்தப்படுறாங்க சிலர் கிடைத்தும் ஒதுக்குறாங்க அவரவர் ஆரோக்கியம் அவரவர் கையில். இக்கரைக்கு அக்கரை எப்பவும் பச்சையாதான் தெரியும் போய் பார்த்தால்தான் அங்கே உள்ள கல்லும் முள்ளும் தெரியும்...

No comments:
Post a Comment