Sunday, 22 January 2017

எது மிருகவதை...?

           


          அன்று இந்த காளை இல்லை என்றால் விவசாயம் இல்லை. மாட்டை ஏர்பூட்டி உழுதால் தான் நாற்று நட்டு, கதிர் அறுத்து நாமெல்லாம் உட்கார்ந்து சோறு திங்க முடியும்... அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று, நெல்லை சாக்கில் கட்டி அந்த காலத்தில் மாட்டு வண்டியில் தானே ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்பட்டது அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று... 


            பஸ், கார் வசதி இல்லாதப்போ இந்த மாட்டை வண்டியில் பூட்டிதானே பயணம் செய்தீர் அப்ப தெரியவில்லையா... மாட்டை வதை செய்கிறோம் என்று.. அப்ப சொகுசா பயணம் செய்தீரே எதன் மீது இந்த மாட்டின் மீதுதானே வேகமா போக வேண்டுமென்று தார் குச்சியை வைத்து குத்தி வதை செய்தீர்களே அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று...

            நீங்க வீட்டில் சொகுசா வாழ செங்கலையும், சிமெண்ட்யும், மரங்களையும் சுமந்து வந்தது இந்த மாடுகள் தானே அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று...

இன்று வரலாறு சொல்லும் அத்தனை கோவில்களும் இந்த காளைகள் சுமந்து வந்த செங்கல், கற்கள்தான் இன்று கம்பீரமாக நிற்கிறது அப்ப தெரியவில்லையா மாடுகளை வதை செய்கிறோம் என்று...

           PETA இந்த அமைப்பு எப்ப வந்தது...? பஸ், கார், கனரக வாகனம் வந்த பிறகுதானே... உங்களை பொறுத்தவரை தேவை முடிந்தவுடன் அது வேண்டாம் என்று வைக்கின்றீர்கள் அதுவே உண்மை... இதுவே.. இந்த கார்,பஸ் ஓடவில்லை எனில் என்ன செய்வீர்கள்?  இந்த மாடு பாவம்,  வதை செய்வதற்கு சமம் என்று நடந்து செல்வீர்களா...? அப்படி செய்தால் நீங்கள் உண்மையிலே இரக்கம் உள்ள மனுஷியாக,  மனிதராக, அமைப்பாக நாங்கள் அதை வரவேற்கிறோம்...


            இந்த காளைய பருத்தி, புண்ணாக்கு போட்டு தனக்கு சோறு இல்லன்னா கூட அதுக்கு வாங்கி போட்டுட்டு இவன் பட்னி கிடக்கிறான் ஏன் அந்த ஒரே ஒரு நாளுக்காக தான்.. இதில் என்ன மிருகவதை இருக்கு? அப்ப வருஷம் முழுதும், உழவுக்கு பார வண்டி இழுக்க அடித்து துன்புறுத்தும் போது வராத அமைப்பு ஒரே ஒருநாள் விளையாட பயன்படுத்தும் போது ஏன் வருகிறது..? இது எந்தவகையில் துன்புறுத்தல் எனக்கு புரியவில்லை...

              மாட்டை வளர்க்கிற ஒவ்வொருத்தனும் மாட்டை விற்கிற போது எப்படி அழுவான் தெரியுமா..? அது இறந்து போனா வீட்டில் இருக்கிற ஒருத்தருக்கும் சாப்பிட தோணாது... அவன் மனுசனா நீங்க மனுசனா... ? ஆனால் இன்று அடிய மாட்டுக்கு, வேறு மாநிலகங்களுக்கு, நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யிறப்போ இந்த அமைப்பு என்ன கண்ண மூடிட்டு இருக்கா...? அதை கொன்னு திங்கிறாய்ங்களே இந்த அமைப்பு ஏன் பார்த்துட்டு சும்மா இருக்கு, தடை செய்ய வேண்டியது தானே...? அப்ப அது வியாபாரம் அதுல நிறைய காசு வருது அதானே உங்க நோக்கம். ஜல்லிக்கட்டு சும்மா பொழுது போக்கிற்காக விளையாடுற ஒரு விளையாட்டு அதனால் வேண்டாம் என்று நினைக்கின்றீர்களா...? இந்த அமைப்பின் நோக்கம் தான் என்ன... எங்களுக்கு புரியவில்லை. 

               இது ஒரு விளையாட்டு அவ்வளவுதானே இதில் என்ன மிருகவதை இருக்கு...? குதிரை பந்தயம் வைத்து கோடியா கோடியா சூதாடுறாங்களே அது உங்களுக்கு சரியாக படுகிறதா...? அந்த குதிரைகள் வதைக்கப்படுவதில்லையா இப்ப புரிகிறது உங்கள் நோக்கம்.  பணம் கட்டி விளையாடினால் ஒரு வேளை ஜல்லிக்கட்டுக்கு அதிகாரம் கிடைக்கும். இது சொற்ப பணத்தில் கிராமத்தார்களே விளையாடுகிற ஒரு விளையாட்டுதானே வெளிநாட்டுகாரர்கள் உள்ளே நுழைய முடியாதே என்று நாசுக்காக மிருகவதை என்ற போர்வை போர்த்தி அமுக்க நினைக்கின்றீர்கள் இதுதான் உண்மை... 

              இந்த அமைப்பு சரியான பதையில் செல்லவில்லை சம்மந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட்டு எல்லோர் மனதையும் புண்படுத்தி இருக்கிறது. இது மிருகவதையை விட கொடுமையானது . நீங்கள் செய்வது ஒருவகையில் மனிதவதை என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள். அந்த காலத்திலே எல்லாமே தடை செய்திருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமே ஆனால் நீங்கள் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை சாதிக்க தமிழ்நாட்டில் இடமில்லை. ஏன்னா இது எங்கள் பாரம்பரியம் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

No comments:

Post a Comment