ஒருநாளில் முடிய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வாரமா நீடித்த பெருமை மத்திய அரசை சாரும்... மெரினாவில் நுழைந்த போது ஒரு கோவிலுக்குள் நுழைந்த ஒரு சந்தோஷம்... கும்பல் கும்பலாக இளைஞர்கள் ட்ரம்ஸ் வைத்து அடித்துக்கொண்டு கோசங்களை எழுப்பிக்கொண்டும், காவடி சுமந்து வருவதுபோல் மாடுகளை உருவாக்கி சுமந்து வந்த காட்சிகள் மெய்சிலிர்க்கிறது... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஊர் திருவிழாவில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு... இதற்காக மோடிக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும்.
பொங்கல் பண்டிகை என்றால் மூன்றே நாளில் முடிந்திருக்கும் யாருக்கும் அது பற்றி தெரியாமலே போயிருக்கும். ஏர்தழுவுதல் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட இந்த போராட்டத்தால் தெரிந்து கொண்டார்கள். ஒரு ஊரோட முடிய வேண்டிய விஷயத்தை உலகிற்கு உணர்த்திய மோடிக்கு இந்த நன்றி கூறுவதில் தவறில்லை...
தமிழினம் அழிகிறதா...? அழிந்து போகுமா...? தமிழ் உணர்வுகள் குறைந்து விட்டதா...? நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாக மாறிவிட்டோமா... என நினைக்கும் போது திடீரென்று இந்த கூட்டம் எங்கிருந்து வந்தது? யார் இவர்களை ஒன்று சேர்த்தது என்று புரியாமல் ஒவ்வொருத்தரும் வியந்து போகிறார்கள். அரசியல் கட்சிகள் இல்லாமல், தலைவன் இல்லாமல் எப்படி இப்படி ஒரு மாபெரும் சக்தியாக மாற முடிந்தது என்று வியந்து போகிறது மற்ற நாடுகள். அமைதியாக இருந்த மக்களுக்கு இத்தனை உத்வேகம் வர காரணம் என்னவென்று எல்லோரும் வியந்து போகிறார்கள்.
இந்த ஒற்றுமையை பார்க்கும் போது தமிழ்நாடு இனி யாருக்கும் பயப்படாது, எங்கே அநியாயம் நடந்தாலும் தமிழன் எங்கெல்லாம் இருக்கிறானோ அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் இனி தமிழ்நாட்டு இளைஞர்கள் குரல் கொடுப்பார்கள் இதில் எந்த ஐயமும் இல்லை... இது சாதாரண போராட்டம் இல்லை மக்கள் மனதில் இத்தனை நாட்களா அடக்கி வைத்திருந்த கோபம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.
இப்பதான் தமிழ் நாட்டில் நடந்த பிரச்சினைக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் . இனி தமிழன் இருக்கும் நாடுகளுக்காகவும் குரல் கொடுப்பார்கள் நம் இளைஞர்கள். வாழ்க பாரதம் வாழ்க தமிழ்... !

No comments:
Post a Comment