நாம் வெள்ளைக்காரர்களை ஒரு கொடுரமானவர்களால்தான்
புத்தகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா ஆனால் இப்போது அவர்களை காணும் போது அவ்வாறு தெரியவில்லை நான் பார்த்தவரை அவர்கள் மென்மையான இளகிய மனம் படைத்தவர்களாதான் தெரிகிறார்கள். சென்னை அடையார், பெசன்ட் நகர் பக்கம் அதிக வெள்ளைக்கார்கள் வசிக்கிறார்கள் அவர்கள் விலங்குகள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பதை காணக் கூடியாதாக இருக்கிறது. நாய், பூனை, காகம் இவைகளுக்கு உணவு அளித்து கருணையோடு பார்த்துக்கொள்கிறார்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம் அவைகளை வீட்டில் இருந்து விரட்டி அடிக்கிறோம். அது மட்டுமல்ல அவர்கள் யாரோடும் பேசும் போது கவனித்து இருக்கின்றீர்கள் சிரித்த முகத்தோடே பேசுவார்கள் அட்ரஸ் கேட்பதாக இருந்தாலும் சரி வேறு விஷயங்களாக இருந்தாலும் சரி எப்போதும் அவர்களின் முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நாம் எப்படி இருக்கோம் என்று சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே புரியும்.
பெசன்ட் நகரில் விஷ்ராந்தின்னு ஒரு ஹோட்டல் இருக்கு அங்கே எப்போதுமே கூட்டமா தான் இருக்கும் அங்கே சாம்பார் வடையும், காபியும், மினி மீல்ஸ்சும் பேமஸ் அங்கே நம்ம ஆளுங்க நான் பட்டர், சப்பாத்தி, பன்னீர் டிக்கா என்று சாப்பிடுகிறார்கள் எனக்கு வெரைட்டி ரைஸ் பிடிக்காது என்று அதை சாப்பிடுகிறார்கள். ஆனால் வெள்ளைக்கார இளைஞன் அழகா மினி மீல்ஸ் வாங்கி சாப்பிடுகிறார் அதில் என்னென்ன இருக்கும் என்று தெரியுமா சிம்பிளான வெரைட்டி ரைஸ்தான் ஒரு சப்பாத்தி, வெஜ் ரைஸ், தயிர் சாதம், புளிசாதம் அல்லது லெமன் சாதம் சாம்பார் சாதம் இவைதான் அதில் இருக்கும் அந்த இளைஞன் சிரித்தபடி ரசித்து சாப்பிடுவதைக் கண்டு நான் வியந்து நின்றேன்.
இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசிங்களேன் நம் ஊர்களில் எத்தனை ஆசிரமங்கள், அனாதை இல்லங்கள் அன்றாடம் சாலையில் வசிக்கும் பிச்சைக்காரர்கள் ஏராளம் ஏராளம் இல்லையா பார்க்கும் இடங்கள் எல்லாம் கோவில் தெரிவது போல் அனாதை இல்லங்கள் நம் கண்ணுக்கு தெரிகிறது அதற்கெல்லாம் எங்கேயிருந்து பணம் வருகிறது என்று நினைக்கிறீர்கள் வெளிநாட்டில் இருந்துதான் வருகிறது அதுவும் வெள்ளைக்காரர்களிடம் இருந்து வருகிறது. ஆனால் நாம் நம் மக்களை அனாதை ஆக்கி வேடிக்கை பார்க்கிறோம் எங்கேயோ இருக்கும் அவர்கள் உதவி செய்கிறார்கள். இப்ப சிந்தித்து பாருங்கள் யார் அரக்கர்கள்..? யார் இரக்கமில்லாதவர்கள்? என்று உங்களுக்கே புரியும் .
உண்மையில் சில விஷயங்களை ஆராய்ந்தால் மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் நாம் கொடுமைப் படுத்துகிறோம் அவர்கள் அவைகளை நேசிக்கிறார்கள். அது மட்டுமல்ல கலை, கலாச்சாரம் ,சாதி , மதம் என்று தம் கட்டி பேசும் நாம் அதன் தரத்தை சீர்குழைக்கிறோம் ஆனால் அவர்கள் நம் கலாசாரத்தை பெருந்தன்மையோடு கற்று போற்றி வருகிறார்கள். நாம் மேலை நாட்டுக் கலாசாரத்தில் மூழ்கி தம் கலாசாரத்தை மறந்து போகிறோம். கூட்டுக்குடும்பத்தை போற்றி வளர்ப்பது இந்தியா ஆனால் நாம்தான் இன்று பல முதியோர் இல்லங்களை கட்டுகிறோம் அதை பல இடங்களில் காண்கிறோம் அவர்கள் யாரும் தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்பதில்லை ஆனால் நாம்? கொஞ்சம் சிந்திப்போம்.
எதுவும் தூர வைத்து பார்க்கும் போது வேறாக நமக்கு தெரிகிறது அதையே அருகே சென்று பார்க்கும் போது முற்றிலும் நாம் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. மனதால் இணைவோம் மாற்றம் ஒன்றே மாறாதது

No comments:
Post a Comment