Monday, 9 April 2018

காவிரி மேலாண்மை வாரியமும் மவுன விரதமும்

ஒரு ப்ளாட் பாராத்தில தள்ளு வண்டியில சாப்பாட்டுக்கடை வைச்சிருக்கிறவன் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா பசிக்கு சாப்பிட சாப்பாடு இருக்காது கடைசி பருக்கையை கூட காசாக்க நினைச்சு கொடுத்திருவான். ஆறு மாசம் இரவு பகலா கஷ்டப்பட்டு நிலத்தை உழுது உரம் போட்டு மண்ணை பதப்படுத்தி விதையிட்டு பயிராக்கி அதை பிரிச்சு வேற இடத்தில நட்டு காத்திருந்தா அது வளர தண்ணி இருக்காது ஆத்துல தண்ணி வரும்னு காத்திருந்தா அது வராது அப்புறம் கடனை உடனை வாங்கி போர் போட்டு தண்ணி பாச்சி கதிர் அறுத்து வீட்டுக்கு கூட கொண்டு வராம களத்து மேட்டுலேயே விலை பேசி வித்துட்டு அந்த விவசாயி களைச்சி போயி ரேஷன் கடையில் புழுத்த அரிசியில் பழைய கஞ்சி குடிக்கிறவன் விவசாயி.ஆனால் ஒரு நடிகன் தன்னோட விருது வழங்கும் விழாவில் கண்ணீர் வடித்து சொல்றான். சினிமாவில் நடிப்பது அத்தனை ஈசியான வேலை இல்ல எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும் பிடிச்சதை சாப்பிட முடியாது உணவு கட்டுப்பாடு அவசியம். இந்த படம் முடியிற வரைக்கும் என்னால "ஒரு பிரியாணி கூட சாப்பிட முடியல எவ்வளவு பெரிய தியாகம் இது. எல்லாரும்  நினைக்கிறாங்க அவனுக்கென்ன சினிமா காரனுக்குன்னு அலட்சியமா சொல்றாங்க ஆனால் நாங்க கஷ்டப்படுறது எங்களுக்குதான் தெரியும்னு கண்ணீர் விடுகிறார்.. அதற்கு எல்லோரும் கை தட்டி விருது கொடுக்கிறார்கள். அவர் நடிக்கும் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? பல கோடிகளில் புரளுகிறார் அந்த நடிகர் ஆனால் ஒரு விவசாயி நாம சாப்பிட சேத்து கால வைச்சிட்டு போட்ட காசை கூட எடுக்க முடியாம கடனுக்கு அடுத்த அறுவடை வரைக்கு வட்டி கட்டுக்கொண்டு இருக்கிறான் உழுதவன் கணக்கு பார்த்தால் உரலுக்கு கூட பத்தாதுன்னு பழமொழி இருக்கு இதில் எது தியாகம்? அத்தனை கஷ்டப்பட்டு உழைச்சு ஊருக்கு கொடுத்திட்டு திங்கிறதுக்கு சோறு இல்லாம இருக்கிறானே இவனா? இல்லை கோடி கோடியா பணத்தை சம்பாதிச்சிட்டு பிரியாணி சாப்பிட முடியலன்னு வருத்தப்படுற நடிகனா? எதுங்க தியாகம்.

எத்தனையோ இடங்களில் பழைய சோத்துக்கே வழியில்லாம இருக்கான்.. எத்தனையோ இடங்களில் படுக்கிறதுக்கு இடம் இல்லாம ரோட்டுல படுத்திருக்கான் அவன் கஷ்டப்படுறதை விடவா நடிகன் கஷ்டப்படுறான். ஒரு அரசாங்க அதிகாரி வருஷம் முழுவது நாயா பேயா உழைச்சு வாங்கிற சம்பளம் 4 லட்சம், அதே ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தால் 3 லட்சம் அது வேலையை பொறுத்து மாறுபடும். இதே கூலி தொழிலாளின்னா 1 லட்சம் கிடைக்கும். ஆனால் ஒரு நடிகனுக்கு ஒரு படம் ஆறுமாசமோ, ஒரு வருஷமோ, இல்ல அஞ்சு வருஷமோ நடிச்சு முடிச்சு கொடுத்திட்டா குறைந்தது 10 லட்சத்தில் இருந்து 36 கோடி வரைக்கும் சம்பளம் கிடைக்குது. ஆனால் அந்த நடிகன் ஏதாவது மேடையில் கண்ணீர் விட்டு அழுதா சோத்துக்கே வழியில்லாத ரசிகன் தலை நீ அழுவாத அடுத்தப்படம் உனக்கு சூப்பர் ஹிட் னு ஆறுதல் சொல்லி கையில் வைத்திருக்கும் பணத்திற்கு டிக்கெட்டு வாங்கிட்டு சோத்துக்கு வழியில்லாம பட்னி கிடப்பான். இதில் எதுங்க தியாகம்?

ஒவ்வொருத்தனும் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறான். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம கிடைச்ச வேலைக்கு உரிய ஊதியம் கிடைக்காம தனது கடமையை ஒழுங்க செய்ய முடியாம தனது தேவையை பூர்த்தி செய்ய முடியாம படுத்தா தூக்கம் வராம அன்றாடம் எத்தனையோ பேர் கஷ்டப்படுறாங்க மீடியாவில் வேலை செய்யுற நீங்க தயவு செய்து நாங்க கஷ்டப்படுறோம்னு   சொல்லாதீங்க செம்ம ....... வருது. நீங்க கஷ்டப்படுறீங்க ஆனா அதோட பலன் உங்களுக்கு அதிகம் ஆனால் ஒரு விவசாயிக்கோ, கூலி தொழிலாளிக்கோ இல்ல இதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சினிமாவோ, டிவியோ இல்லன்னா யாரும் செத்து போயிட மாட்டாங்க ஆனா திங்கிறதுக்கு சோறு இல்லன்னா செத்து போயிடுவீங்க செத்து. விவசாயிக்கு குரல் கொடுக்க சொன்னா நீங்க மவுன விரதம் இருக்குறீங்க ஏன்யா... நமக்கு வேண்டியது கிடைக்கலன்னா பேசி தானே வாங்கணும் ஆனா அப்ப கூட நீங்க பேசாம சமத்தா மவுன விரதம் இருந்தா எப்படி? நீங்க சினிமாவில் செய்யுறதை அப்படியே இறங்கி செய்யுங்க ஒட்டு மொத்த மக்களும் உங்களுக்காக நிற்பாங்க.. நீ நல்லா இருக்கனும்னு காசு கொடுக்கிறவன் அவன் நல்லா இருக்கனும்னு நீ வந்தா உன்னை சும்மா விட்டுறுவான தலையில் வைச்சு கொண்டாட மாட்டான் அப்புறம் ஏன்யா நீங்க இப்படி இருக்குறீங்க.

என்னவோ போடா மாதவா... மக்கள் மனசை நீங்க நல்லா புரிஞ்சு வைச்சிருக்குறீங்க உங்க காட்டுல மழைதான். மக்களுக்கு எதையும் மறக்கிற சக்தி இருக்கு அதை பயன்படுத்தி நீங்க நல்லா குளிர் காயுறீங்க எப்போது மக்கள் இதையெல்லாம் உணர்வார்களோ யாமறிய பராபரமே....

No comments:

Post a Comment