Friday 3 August 2018

வாழ்க்கையின் தத்துவம்

இட்லியை சாப்பிடும் போது...

ஒருவர் :      "இந்த இட்லிய கொஞ்சம் சின்னதா ஊத்தி இருந்தால் 2 இட்லி கூட சாப்பிடலாம் இவ்வளவு பெரிசாவா ஊத்துறது... "

மற்றொருவர் : "இட்லிய இன்னும் கொஞ்சம் பெரிசா ஊத்தி இருக்கலாம் 2 சாப்பிட்டாலும் கம்முன்னு இருக்கும்... "



ஒருவர்: "இந்த தோசை என்ன இவ்வளவு லேசா இருக்கு இப்படி ஊத்தினா எத்தனை சாப்பிடுறது... மொத்தமா ஊத்தினா நறுக்குன்னு 2 சாப்பிடலாம்..."

மற்றொருவர்: "இந்த தோசையை கொஞ்சம் லேசா ஊத்தினா சாப்பிட சாப்பிட ஆசையா இருக்கும்.."

இப்படியான மனிதர்கள் மத்தியில் தான் நாம் வாழ்கிறோம். பல மனிதர்கள் இந்த இட்லியையும், தோசையையும் சாப்பிடுகிற மனிதர்கள் மாதிரி, சில மனிதர்கள் இதை பொறுமையா சமைக்கிற சமையக்காரன் மாதிரி அத்தனை பொறுமைசாலிகள். இதே இட்லியையும்,  தோசையையும் அவர்களுக்கு செய்ய வருமான்னு கேட்டா தெரியாது ஆனால் நாங்க குறை மட்டும் நல்லா சொல்வோம்....

ஒரு சமையலிலே இத்தனை விஷயம் அடங்கி இருக்கும் போது நம் வாழ்நாளில் எத்தனை விஷயங்களை பார்க்க வேண்டி இருக்கு? சாதம், குழம்பு, ரசம், பொறியல், வறுவல், பலகாரம்,  பச்சடின்னு நிறைய இருக்கே. ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு சுவை தருவது போல் ஒவ்வொரு மனிதனையும் நாம் சந்திக்கிறோம். சில உணவு ரொம்ப ருசியாக இருக்கு சில உணவு கொஞ்சம் பரவாயில்லை சில உணவு வாயிலே வைக்க முடியவில்லை... மனிதர்களும் இப்படிதான்.

எல்லாரையும் திருப்தி படுத்தனுண்னா நாம கை தேர்ந்த சமையக்காரனா தான் இருக்கனும் இல்லன்னா அந்த சமையல் போல் வாழ்கையும் ருசிக்காது.

No comments:

Post a Comment