Wednesday 14 November 2018

ஜுரம் , தலைவலி, உடம்பு வலிக்கு சிறந்த மருந்து

ஜுரம், தலைவலி, உடம்பு கை கால் மூட்டு வலிக்கு சிறந்த  பெருமருத்து ரசம்....

தேவையான பொருட்கள் :

கண்டதுப்பிலி - சிறிது
சதகுப்பை - சிறிது
அரத்தை - சிறிது
சீரகம் - சிறிது
மிளகு - சிறிது
முழு பூண்டு - 1
தக்காளி -  2
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் - சிறிது
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேசையான அளவு
புளி - சிறிது

(இதோடு மொழிக்கிழங்கு வேரையும் சேர்த்து இருக்கேன் அது கிடைக்காதவர்கள் மற்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்)



செய்முறை :

கண்டதுப்பிலி, சதகுப்பை, அரத்தை, மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் அல்லது அம்மியில் அரைத்துக்கொள்ளவும். புளியை கரைசி வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து தக்காளியை கழுவி விட்டு கையால் நன்கு பிசைந்து கரைத்துக்கொள்ளவும் அதோடு புளிக்கரைசல், அரைத்த விழுதுகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும் அதோடு மஞ்சள்,  உப்பு,  பெருங்காயத்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தாளிக்காமல் கொதிக்கவிட்டு இறக்கவும்... ( நான் வெஜ் சாப்பிடுறவங்க இதில் நண்டு அல்லது கருவாடு சேர்த்துக்கொள்ளலாம்)

இப்போது சுவையான மருந்து ரசம் ரெடி...

முன்பு பெண்கள் பூப்பெய்த காலத்திலும், மகப்பேறு காலத்திலும் இந்த ரசம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இப்போது இல்லையென்று நினைக்கிறேன். இது உடம்பு கை கால் மூட்டு வலிகளை குணப்படுத்தும் சிறந்த வலி நிவாரணி. எங்கம்மா எனக்கு சொன்னது நான் உங்களுக்கு சொல்கிறேன் இதென்ன புதிதாக இருக்கிறது இதை சாப்பிட்டால் என்னாகுமோ என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். ஆரம்பத்தில் நான் நம்பவில்லை அதன் பிறகு கூகுகிளில் #அரத்தை #கண்டதுப்பிலி #சதகுப்பை இவைகளை தேடி படித்த பிறகு இதன் உண்மையை நான் அறிந்துகொண்டேன் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்களும் தேடிப்பாருங்கள்...


நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கின்ற கேட்டு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஒவ்வொரு வீட்டு அஞ்சரை பெட்டியிலும் இருக்க வேண்டிய பொருள். இவை இருந்தால் நாம் டாக்டரை நோக்கி போக வேண்டிய அவசியமே இருக்காது...

2 comments: