Sunday, 4 January 2015

உடல் எடை குறைய வேண்டுமா?

              உடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற  ஒரு மருந்து சொல்லபோகிறேன்.

 தேவையான பொருட்கள்:-

சீரகம் - 25 கிராம் 
பட்டை - 25 கிராம் 
லவங்கம் - 25 கிராம் 
மிளகு - 25 கிராம்
தேன் - பெரிய பாட்டிலில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்
செய்முறை:-

                    இவை நான்கையும் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விரக்கடல் அதாவது மூன்று விரல் சேர்த்தமாதிரி அரைத் பொடியை அள்ளி போட்டு 1/2 டம்ளர் வரும் வரை காய்ச்சி, அதில் 1 ஸ்பூன் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகளை அகற்றி 2 மாதத்தில் எடையை குறைத்துவிடலாம்.

             இந்த பொடி தயாரிக்க நீங்கள் எவ்வளவு எடுத்துக்கொண்டாலும் சம அளவுதான் எடுக்க வேண்டும். நாம் கறிசமைக்க இந்த நான்கு பொருட்களையும் சேர்ப்போம் அது வாசனைக்காக என்று நினைத்திருப்போம் இப்போது புரிகிறதா? மாமிசம் கொழுப்பு என்பதால் அது நம் உடம்பில் சேரக்கூடாது என்பதற்காகதான் இவை சேர்க்கப்படுகிறது. நம் முன்னோர்கள் தெரிந்து செய்தார்களா இல்லை தெரியாமல் செய்தார்களா என்று தெரியாது. ஆனால், அதில் ஒரு காரணம் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

 பின்குறிப்பு:

              (அந்த பொடியை 1 ஸ்பூன் போடலாம் ஆனால் பெண்களுக்கு சிறு வயிற்று வலி, வெள்ளைப்படுதலும் ஏற்படும் அதனால் பெண்கள் சிறிது மட்டும் சேர்த்துக் கொள்வது     நல்லது உங்கள் உடலுக்கு ஒத்துக்       கொண்டா ல்    1 ஸ்பூனாக சேர்த்துக் கொள்ளுங்கள்)

1 comment:

  1. இந்த
    கசாயத்தை குடித்து வந்தால் சைனஸ் தொந்தரவுகளும் நீங்கும் அதவாது தும்மல்
    வருவது குறையும். இது பனிக்காலம் சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு மிகச்
    சிறந்த மருந்து.

    ReplyDelete