"எதையும் எதிர்பார்த்து வாழ்வது நட்பல்ல
எதார்த்தமாய் வாழ்வதுதான் நட்பு"
நண்பர்கள் நமக்கு இன்னொரு தாய் மாதிரி கடவுள் கொடுத்த கிப்டு அதை தொலைத்தால் துன்பம் கூடவே வைத்துக்கொண்டால் எந்நாளும் இன்பம்.
அம்மா அப்பா, அண்ணன் அக்கா, தம்பி தங்கை, கணவன் மனைவி இவர்களெல்லாம் அன்பாக இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இரத்த சம்மந்தம் இருக்கிறது. ஆனால் இது எதுவும் இல்லாத நட்பிடம் எல்லா உறவுகளும் இருக்கிறதே எப்படி?
அதாங்க கடவுள் நமக்கு கொடுத்த கிப்டு
என்ன நண்பர்களே! உங்களுக்கு இது போன்ற நட்பு இருக்கிறதா? பள்ளி, கல்லூரி, அலுவலகம் என் கண்டிப்பாக இருக்கு. அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!
பாலும் தேனும் உனக்கு நான் தருவேன்
பதிலுக்கு பாசத்தையும் அன்பையும்
மட்டும் நீ எனக்குத் தந்தால் போதும்
என்பதும் நட்புதான்..!
உனக்குப் பிடிக்கலன்ன என்ன
உனக்கு நான் போட்டு அழகுப்
பார்ப்பேன் என்று கூறும்
தாயுள்ளம் நட்புத்தான்..!
நல்லா சாப்பிடு நேரத்திற்கு தூங்கு
உடம்பை பார்த்துக்கோ என்று அக்கறைக்
கொள்வதும் நட்புதான்..!
உடம்பை பார்த்துக்கோ என்று அக்கறைக்
கொள்வதும் நட்புதான்..!
ஆபிஸ் போறீயா..? அங்க என்ன
பிரச்சனை யாராவது எதும்
சொன்னாங்களா என ஆராய்வதும் நட்புதான்..!
ஏய்..! நீ அழகாய் இருக்கிறாய்
எனக்கு
பயமாக இருக்கிறது எனக் கிண்டல்
செய்வதும் நட்புதான்..!
பயமாக இருக்கிறது எனக் கிண்டல்
செய்வதும் நட்புதான்..!
எங்கிட்ட சொல்லாம எங்க போனே
எனக்கு ரொம்ப கவலையா போச்சு
தூக்கம் வரல சாப்பிட முடியல
இனிமேல் இப்படி செய்யாதே
எனக் கோபம் கொள்வதும் நட்புதான்..!
நேற்று ஏன் என்கூட பேசல என் மேல என்ன கோபம் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடியாதுன்னு உனக்குத் தெரியாதா என சண்டை போடுவதும் நட்புதான்..!
நீ என் கூட ஒருநாள் பேசாமல் இருந்தாலும் உனக்கு என்னாச்சோ னு பதட்டமா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குன்னு அழுவதும் நட்புதான்..!
உனக்கு உடம்பு சரியில்ல இல்ல அதான் கோவிலுக்கு போனேன் உனக்கு பிறந்தநாள் இல்ல அதான் ட்ரீட் வைச்சேன் என்று சொல்வதும் நட்புதான்..!
ஏய்... உனக்கு ஏதாச்சும் வேணும்னா என்கிட்ட கேட்க மாட்டியா ஏன் தயங்குற ஏன் அன்னியமா நினைக்கிற என உரிமை கொள்வதும் நட்புதான்..!
உன்னோடு சண்டை போடுவதற்கும் உன்னை சந்தோஷப்படுவதற்கும் உன் மீது கோபம் கொள்வதற்கும் உன்னைவிட்ட எனக்கு யாருயிருக்கா உன்னை அக்கறையா பார்த்துக்கொள்ள என்னைவிட்டா உனக்கு யாருயிருக்கா என ஆறுதல் சொல்வதும் நட்புதான்..!
நண்பர்கள் நமக்கு இன்னொரு தாய் மாதிரி கடவுள் கொடுத்த கிப்டு அதை தொலைத்தால் துன்பம் கூடவே வைத்துக்கொண்டால் எந்நாளும் இன்பம்.
அம்மா அப்பா, அண்ணன் அக்கா, தம்பி தங்கை, கணவன் மனைவி இவர்களெல்லாம் அன்பாக இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இரத்த சம்மந்தம் இருக்கிறது. ஆனால் இது எதுவும் இல்லாத நட்பிடம் எல்லா உறவுகளும் இருக்கிறதே எப்படி?
அதாங்க கடவுள் நமக்கு கொடுத்த கிப்டு
என்ன நண்பர்களே! உங்களுக்கு இது போன்ற நட்பு இருக்கிறதா? பள்ளி, கல்லூரி, அலுவலகம் என் கண்டிப்பாக இருக்கு. அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!
அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்
ReplyDeleteஅனுபவிப்பவர்களுக்கும்
அனுபவித்தவர்களுக்கும் தான்
பதிவின் ஆழம் புரியும்
மனம் கவர்ந்த பதிவு
பதிவிற்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உண்மைதான் உணர்ந்தவர்களுக்கு புரியும். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
Delete