தேடல்
இல்லாத வாழ்க்கை சுவாரஸ்சியம் இல்லாதது. தேடல் நம்மைவிட மற்றவர்களுக்கு
தான் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. நாம் நமக்காக வாழ்வதை விட
மற்றவர்களுக்காகதான் வாழ்கிறோம். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளார்கள்,
கலைஞர்கள் இவர்களின் பங்களிப்புகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
அந்தவகையில் சில தொகுப்புகளை உங்களுக்காக நான் தேடி தொகுக்கிறேன்.
கிரிகர் ஜோகன் மெண்டல் ஆஸ்திரிய அகஸ்தினியத் துறவி தான் சார்ந்த துறவி மடத்திலேயே தொடக்க கல்வியையும் பின்பு வியன்ன பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் கணிதமும் பயின்றார். ஆசிரியர் பயிற்சி சான்றிதழல்த் தேர்வில் தோல்வியடைந்தாலும் இவருடைய அறிவியல் ஆர்வம் குறையவில்லை. மடத்திலேயே தோட்டப் பட்டாணிச் செடியின் கலப்பின ஆய்வினை மேற்கொண்டார். கணிதம், அறிவியல் இரண்டையும் இணைத்து கணக்கிதலை வெளியிட்டு மரபுவழிக் கடத்தல் விதிகளை வெளியிட்டார்.
சார்லஸ் டார்வின் தனது 22 ஆம் வயதில் உயிரியல் ஆய்வுக்காக் கடற்பயணத்தை மேற்கொண்டார். தென் அமெரிக்கா மற்றும் அதன் கடலோரத் தீவுகளை 5 ஆண்டுகளாக உயிரியல் ஆய்வுக்காக ஆராய்ந்தார். பின் இங்கிலாந்து திரும்பியவுடன் மீண்டும் கடற்பயணத்தை மேற்கொள்ளாது தன் இருப்பிடத்திலேயே மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு இயற்கைத் தேர்வு என்னும் கருதுகோளை உருவாக்கினார். அப்போது அவரால் உயிரினங்களின் வேறுபாடுகளின் காரணத்தை விளக்க இயலவில்லை. மெண்டலின் விதிகள் இவருக்குத் தெரிந்திருக்குமேயானால் இன்னும் பல கொள்கைகளை வெளியிட்டிருப்பார். இவ்விரு அறிஞர்களுள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்க வாய்ப்பின்றி இருந்தனர். இவருடைய மண்புழு மற்றும் மண்வளத் தன்மை ஆய்வுகள் மூலமாக தான் ஒரு இயற்கை ஆர்வலர் என்று உணர்த்தியிருக்கிறார்.
வில்லியம் ஹார்வி என்ற ஆங்கிலேயே மருத்துவர் 1628 ஆம் ஆண்டு மனிதனில் இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தார். அதுவரை நம்முடைய உடல் முழுவதும் இரத்தத்தால் ஆனது மற்றும் நிலையானது எனக் கருதி இருந்தோம்
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பாட் ஐன்ஸ்டீன் தான் ஒரு பொருள் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுப்பிடித்தார்.
ஹென்றிஜின் ஜெப்ரிஸ் மோஸ்லே என்ற ஆங்கில இயற்பியல் வல்லுநர் தான் X கதிர்களை பயன்படுத்தி தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார்.
இத்தாலி நாட்டை சேர்ந்த கலிலியோ தான் சாய்தளத்தில் பொருள்களின் இயக்கத்தை ஆய்வு செய்தார். கலிலியோ பின் விசை மற்றும் இயக்கம் பற்றிய கருத்துக்களை நியூட்டன் ஆராய்ந்து பொருள்களின் இயக்கம் பற்றிய மூன்று விதிகளை வெளியிட்டார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஐசக் நியூட்டன் பொருள்களின் ஈர்ப்பு பற்றி கண்டுப்பிடித்தார். ஒரு ஆப்பிளை வைத்து புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்தார். இன்று இவரின் பிறந்த நாள்.
மயில்சாமி அண்ணாத்துரை பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கோதவடி எனும் சிற்றூரில் பிறந்து 1982 ME முதுகலை பட்டத்தை பெற்று அதே ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வகத்தில் அறிவியல் அறிஞராக பணியேற்றார். தற்போது சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் II இவற்றின் திட்ட இயக்குநராகவும் இருக்கிறார்.
இவர்களின் தேடல் தான் இன்னும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தின்னை பள்ளிக்கூடம் இல்லாத காலத்திலே ஆன்மிகத்தில் கணக்கிட்ட விஷயங்களை தான் இன்றும் நாம் அறிவியல் என்கிறோம். எனைக்கேட்டால் ஆன்மிகத்திலிருந்து தான் அறிவியல் வந்திருக்கிறது என்பேன்.
அயல்நாட்டு மருத்துவர்கள் நாம் நாட்டில் உள்ள ஓலைச்சுவடிகளில் இருந்துதான் கண்டுபிடிக்கிறார்கள். கண்டுபிடிக்கப்பட்டவை ஏராளமா உண்டு அதில் சிறு குறிப்புகள் தான் இவை. சினிமா, தொலைக்காட்சி, வானொலி, புத்தகம் இவைகள் எல்லாமே தேடலில் தான் வாழ்கிறது. வாருங்கள் நாமும் அவைகளை தேடித் தேடி தொலைந்து போவோம்.
இந்த பதிவு மாணவர் யாரேனும் ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நிச்சயம் பயனுள்ள பதிவுதான். பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.!
Delete