காதலர் தினம் நம் இந்திய கலாசாரத்தில் இல்லாத ஒன்று. மேற்கத்திய கலாசாரத்தைதான் நம் காதலர்கள் கொண்டாடுகிறார்கள். சரி, இந்த தினம் என்றால் என்ன? எய்ட்ஸ் ஒழிப்பு தினம், போலியோ ஒழிப்பு தினம் இப்படி நிறைய சொல்லலாம். அதாவது, நமக்கு ஆபத்து தரக்கூடிய நமக்கு தீமை தரக்கூடிய ஒன்றை ஒழித்தப் பிறகு அதை ஒரு தினமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த காதலர் என்பது ஒரு துக்க நாள் "வேலன்டைன்" என்ற ஒருவன் இறந்த நாளைதான் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆக ஒரு காதல் இறந்ததை, ஒரு காதலன் இறந்ததைதான் இன்றைய காதலர்கள் அதை சந்தோஷமாக , உல்லாசமாக, கடற்கரையிலும், ஹோட்டல்களிலும் மறைவான இடங்களிலும் கொண்டாடப்படுகிறதா? இந்த காதலர் தினம் பெற்றோருக்குதான் துக்கத்தினமோ?
காதலர் தினம் வேண்டாம் என்று மறுப்பவர்கள் காதலுக்கு எதிரியானவர்கள் அல்ல நாகரிக சீர்க்கேட்டை எதிர்க்கிறவர்கள். விலங்குகள் கூட கார்த்திகை மாதம் வந்துவிட்டால் பொது இடத்தை அசிங்கமாக்குகிறது அப்ப மனிதர்கள் என்ன விலங்குகளா இல்லைதானே? பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லோருக்கும் சொல்லி தாய் தந்தையர் அருகில் இருக்க விருந்து வைத்து எல்லோரும் கூடி மகிழ்கிறார்கள்.
நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஊர் அறிய எல்லோரையும் அழைத்து சொந்த பந்தங்கள் சூழ அந்த நாளை மனநிறைவோடு சந்தோஷமாக வாழ்த்தி கொண்டாடுகிறார்கள். இதை ஏற்றுக்கொண்டவர்கள் காதலர் தினத்தை ஏன் மறுக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். ஆனால் இந்த காதலர் தினத்தில் ஒரு சுயநலம் இருக்கிறது கவனித்தீர்களா?
சம்மந்தப்பட்ட ஒரு ஆணும், பெண்ணும் மட்டும் யாருக்கும் தெரியாமல் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் இது ஏன்? காதல் திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள் கூட தன்பிள்ளைகள் தன் காதலியோட/காதலனோட காதலர் தினத்தை கொண்டாடுவதை அனுமதிப்பது இல்லை அவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதும் இல்லை இது ஏன்? அப்படியெனில் இது நாகரிகமான செயல் இல்லை தானே? ஏனெனில் அது நியாயமான காதலாக, சரியான காதலாக அந்த வயதிற்குரிய காதலாக, இல்லை என்பதுதானே காரணமாக இருக்க முடியும்.
இந்த காதலர் தினம் என்பது ஒரு காமன் பண்டிகையாக தான் தெரிகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு ஹோட்டல், பார், பீச் ஆகிய இடங்களில் இரவில் தான் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் எத்தனை பெண்கள் தனது கற்பை இழக்கிறார்களோ தெரியாது.
பெரிய பெரிய ஹோட்டல்களில் காதலர்கள் மது அருந்திக்கொண்டு, முத்தமிட்டு கொண்டு, உரசிக்கொண்டுதான் இந்த தினத்தை கொண்டாடுகிறார்கள். தனக்கு வேண்டிய துணையை, வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய இணையை யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொண்டு சிலகாலம் வாழ்வதும் அதை ஒரு நாள் கொண்டாடுவதுதான் காதலர் தினமா? தனக்கு தேவையான துணையை தேடிக்கொள்ள நாம் விலங்குகள் அல்ல நாகரிக மனிதர்கள் என்பதை யாரும் மறுக்கக்கூடாது.
காதல் என்பது ஒரு அழகான உணர்வு அன்பு, பாசம், கருணை இவை எல்லாம் கலந்த கலவையைதான் காதல் என்று பெயர் வைத்தார்கள். இது அம்மா அப்பா, அண்ணன் தங்கை, நண்பர்கள் அனைவரிடத்திலும் இதை உணரலாம். ஆனால் அதை காமத்து உணர்வாக யாரும் அங்கீகரிக்க வேண்டாமே?
இந்த காதலர் தினத்தில் வயது வந்த, பக்குவமான, எல்லை மீறாத காதலே உத்தமமான காதல் அவர்களுக்காக நாமே வாழ்த்துச் சொல்கிறோம். அவர்களின் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறோம். பிப்ரவரி 14 ல் காதலை கொண்டாடும் காதலர்களுக்கு ஒரு கேள்வி. உங்களுக்கு இது எத்தனையாவது காதல்? இந்த காதலாவது நிலைக்குமா? இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா?
"காய்ச்சல் வருவது போல் இந்த காதல் எங்கிருந்து வருகிறதோ தெரியவில்லை" பார்த்து, பேசி. பழகி வருவது காதல் அல்ல, பார்த்த உடனே வருவதுதான் காதல் என்கிறர்கள். அதனால்தான் நிலையில்லாமல் 'பார்க்'கின்ற இடமெல்லாம் காதல் வருகிறதோ என்னவோ..?
மூளை உள்ளவர்கள் கொஞ்சமாவது சிந்திக்கட்டும்.
''..இந்த காதலர் தினம் என்பது ஒரு காமன் பண்டிகையாக தான் தெரிகிறது..
ReplyDeleteநியாயமான பயம் சகோதரி.
இனிய காதலர் தின வாழ்த்து
இரண்டு நாள் முன்பு.
இனித் தான் நான் கவிதை எழுதப் போகிறேன்
வேதா. இலங்காதிலகம்:
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி
Delete