Friday, 27 February 2015

சுழியம்

தேவையான பொருட்கள்:

 கடலைப்பருப்பு - 1/2 கிலோ 
வெல்லம் - 2
 தேங்காய் - 1
 ஏலக்காய் - சிறிது
 மைதா - 1/4 கிலோ
எண்ணெய் - 1/2 லிட்டர்


 செய்முறை:

            கடலைப்பருப்பை ஊரவைத்து லேசாக வேகவைத்து தண்ணீரை சுத்தமாக வழிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் லேசாக அரைத்துக்கொள்ளவும்.

          இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து பாவு பதம் வந்ததும், தேங்காய், அரைத்த கடலைப்பருப்பு, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக கிளறி கெட்டியாக வந்ததும் உருண்டையாக உருட்டி கரைத்த மைதா மாவில் உருண்டையை நனைத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

         இப்போது இனிப்பான சுழியம் ரெடி.

 (இது தீபாவளி அன்று அனைத்து வீடுகளிலும் செய்யக்கூடிய பலகாரம்)

No comments:

Post a Comment