நினைவுகள் என்பது எத்தனை ஒரு அழகான விஷயம். ஏதோ ஒன்றை தேட போய் ஏதோ ஒன்று என் கையில் சிக்கியது. 2004 ல் இலங்கை வானொலிக்கு நான் எழுதிய இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், எனக்குப் பிடித்த அறிவிப்பாளர் வந்த போது ஒலித்த பாடலின் தொகுப்புகள், அவருக்கு எழுதிய கடிதங்கள், சிறுகதைகள் என அடங்கிய ஒரு நோட்டு புத்தகம். அதை எடுத்து பார்க்கும்போது ஏனோ... என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்த வைத்தது. இன்னும் சில பாடல்களை எங்காவது கேட்கும்போது இது என் பாட்டு, இது அந்த அறிவிப்பாளருக்குப் பிடித்தப்பாட்டு, அப்போது அவர் அப்படிச் சொன்னார் என்று அப்படியே செவி வழியே வந்து போகிறது. அந்தவகையில் எனக்குப் பிடித்தப் பாடலையும், எனக்காக அன்று ஒலித்தப் பாடலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.
"தீர்த்தக்கரையினிலே" என்ற படத்தில் சின்னக்குயில் சித்ரா பாடியது. 'கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே...' எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. "எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் அதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் மனம் இல்லை பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு உதவுகின்ற மனம் ஏனோ இல்லை அதைத்தான் இந்தப் பாடல் சொல்கிறது. கேட்டுப்பாருங்களேன்.
2. உன்னால் முடியும் தம்பி படத்தில் "உன்னால் முடியும் தம்பி தம்பி... இந்தப் பாடலில் உள்ள அனைத்து வரிகளும் உண்மையான வரிகள் நம்பிக்கையைத் தூண்டு வரிகள். "கள்ளுக்கடை காசுலதாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா..." எத்தனை உண்மையான வரிகள் வாலியின் பாடலில்தான் எத்தனை வலிமை... கேட்டுத்தான் பாருங்களேன்.
5. வேதம் புதிது என்ற படத்தில் "கண்ணுக்குள் நூறு நிலவா" இந்த பாடல் எஸ்.பி.பி யும் சித்ராவும் பாடியது. வானத்து நீலத்தை மையாக்கி வானவில்லை எழுதுகோளாக்கி காதல் கடிதம் எழுதும் இரு உள்ளங்களின் உணர்வுகள் இந்த பாடல். வாருங்கள் கேட்போம்.
இந்தப் பாடல்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? இந்த பாடல் தொகுப்புத்தான் எனக்கும், இலங்கை வானொலிக்குமானா உறவை பலப்படுத்தியது. ஆனால், அப்போது இருந்த ஆர்வம், விருப்பம், சந்தோஷம் இப்போது இல்லை. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது.
மனம் மட்டும் முன்போல் இல்லையே என்று வருந்திக்கொண்டே இருக்கிறது.
பாண்டி நாட்டு தங்கம் ,வேதம் புதிது, இந்த இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள் மறுக்கவே முடியாது ,ஒரு வேளை 90 களில் காதல் வயப்படிருந்தால் இந்த பாடல்கள் காதில் தேனாக இனித்திருக்கும் ,இப்போ வயது கூடி விட்டதால் மனதில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம்
ReplyDeleteஇசைக்கும்,
Deleteஆன்மிகத்திற்கும் யாரும் வயதை ஒப்பிடாதீர்கள். இந்தப் பாடல்கள் வரும்போது
நாங்கள் ரொம்ப குட்டிப்பிள்ளைகள் ஆனால் ரொம்ப பிடிக்கும் அதற்காக காதல்
வயப்பட்டவர்களுக்குத்தான் இது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இசைக்கு
எப்படி மொழி அவசியம் இல்லையோ அப்படியே ரசனைக்கும். இசையை ரசிப்பவர்களுக்கு
எந்த காலத்து இசையும் பிடிக்கும்.