Sunday 22 February 2015

பாடும் வானம்பாடி சூப்பர் சிங்கர்ஸ்

              ஒரு நேரத்தில் வாய்ப்புக் கிடைக்காமல் அலைந்த கலைஞர்கள் ஏராளம். ஆனால் இன்று திறமையானவர்களைத் தேடி வாய்ப்புகள் வருகிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள். அந்தப் பணியை விஜய் டிவி சிறப்பாக செய்து வருகிறது.

            நேற்று சூப்பர் சிங்கரில் ஸ்பூர்த்தி என்ற 9 வயது சிறுமி எத்தனை அழகாக பாடி முதல் இடத்தை தட்டிச்சென்றது. அந்தக் குழந்தையை பார்க்கையில் பொறாமையாக இருக்கிறது. இந்த வயதில் நாம் என்ன செய்தோம் என்று, இப்பவும் எதுவும் செய்யவில்லை மேடை ஏறினாலை கை, கால் உதறுகிறது. ஆனால் இந்த சிறுமிகள் எவ்வளவு தைரியமாக பயம் இல்லாமல் பாடுகிறார்கள்.


             அதையடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜெசிகா எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை ஈழதமிழர்களுக்கும், அனாதை குழந்தைகளுக்காகவும் தருவதாக அறிவித்தார்.

             அந்தப் பெண் ஒவ்வொருப் பாடலிலும் ஈழத் தமிழர்களுக்காக பாடினார். அவர் சிறுப்பிள்ளையாக இருந்தாலும் அந்த வலியை அந்த உணர்வை தன் பாடலில் பதிவு செய்தார். அதோடு விட்டுவிடாமல் தனக்கு கிடைத்தப் பணத்தையும் அவர்களுக்குத் தந்து நெஞ்சத்தைத் தொட்டுவிட்டார்.

          கனடாவில் இருந்து வந்து ஒரு வருடமாக கஷ்டப்பட்டு அதில் கிடைத்தப் பணத்தை கொடுப்பது மிகப்பெரிய விஷயம். அவர் பணத்தை மட்டும் ஈழதமிழர்களுக்காக கொடுக்கவில்லை அவரின் உழைப்பை கொடுத்திருக்கிறார் உண்மையில் இவரை நாம் பாராட்ட வேண்டும் ஈழதமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து தமிழர்களும் அவருக்கு நன்றி கடன் பட்டவர்கள். அனைத்து தமிழர்கள் செய்ய வேண்டியதை அந்த சிறுப்பெண் செய்து இருக்கிறது.

             நாம் என்ன செய்து விட்டோம் என நினைக்கும் போது வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது. தான் பிறந்த நாட்டிற்காக அவர் தம் கடமையை செய்தார். கடவுளின் ஆசி எப்பவும் அவருக்கு இருக்க வேண்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment