Friday 6 March 2015

கவிதை நயமும் கிராமத்து இசையும்

            "உள்ளத்து உள்ளது கவிதை இன் உருவெடுப்பது கவிதை"

           இது கவிமணியின் வாக்கு ஏட்டிலக்கியம் நாட்டுப்புற இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் ஒப்பிப்பொருந்தும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய நான்கினையும் கூறுவர். இந்நான்கும் ஓரளவு ஒப்ப அமையும் போது சிறிய கவிதை என்பது அவர்தம் கருத்து.

         இதனையே நன்னூல் ஆசிரியர் பவனந்தியார் இப்படி கூறுகிறார்.

 "பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் ஆணிபெறச் செய்வன செய்யுள்"


          அதாவது, உடம்பு, தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எழும்பு, மச்சை, சுவேத நீர் என்றும் ஏழு வகைத் தாதுக்களினால் இயற்றப்படுவது. அது உயிர்க்கும் இடமாக அமையும் அதுபோலச் செய்யுளும் இயற்சொல், தமிழ்சொல், தசைச்சொல், வடசொல், என்னும் நான்கு வகைச் சொற்களாலும் இயற்றப்பட்டுப் பொருளுக்கு இடமாக அமைகிறது. பொதுவாக கற்பனை மூவகைப்படும் அவை படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்க கற்பனை ஆகும்.

                 முதலில் படைப்பு கற்பனை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளை இப்படி சொல்கிறார் கவிஞர் சுத. திருநாவுக்கரசு

                                          குளத்தங்கரையோரம் நான் - ஒரு
                                         குயில் போலக் காத்தியிருந்தேன்
                                         குயிலென்றும் பார்க்காமே - ஒரு
                                         குண்டுபோட்டுச் சுட்டானே
                                        ஆற்றங்கரையோரம் நான் - ஒரு
                                        அன்னம் போலக் குந்தியிருந்தேன்
                                        அன்னம் என்றும் பார்க்காமலே - ஒரு
                                        அம்பை வைச்சு எய்தானே...!

             தன் கணவன் இறந்ததையும், அவன் குண்டு போட்டு மாண்டதையும் அந்தப் பெண்ணின் துயரத்தை ஆசிரியர் அழகாக குறிப்பிடுகிறார்.

           அடுத்து, தாலாட்டு. தாலாட்டு பிடிக்காத குழந்தை உண்டா? தாலாட்டு தாயின் கற்பனைக்கு வடிகால். இந்த குழந்தையின் கண்ணீர் அவருடைய சிந்தனைப் பொறியைத் தட்டிவிடுகிறது. கற்பனைப் பெருக்குக் கவிப்பெருக்காகிப் பாய்கிறது.      

                                                                  ஆரடித்த கண்ணீர்
                           ஆறாய்ப் பெருகியது?
              அங்கெடுத்த கண்ணீர்
                          ஆறாய் குளம் பெருகித்
             தாயார் மடி நிறைந்து
               தோள் நிறைந்து
           மாமி மடி நிறைந்து
                                    மாமனார் தோள்நிறைந்து
                    சித்திரை மாதம் சிறந்த
                               வெள்ளம் வந்தது போல
                   வைகாசி மாதம் வசந்த
                               வெள்ளம் வந்தது போல
                  ஆறு பெருகி
                          ஆணை குளிப்பாட்டி
                  குட்டை பெருகி
                          குதிரை குளிப்பாட்டிக்
                  குளமாகத் தேங்கி
                          குதிரை குறித்தேறி
                  முந்நூறு பார்ப்பாரும்
                          முழுகிக் கரைசேர்ந்து]]
                  ஐந்நூறூ பார்ப்பாரும்
                         அழுதுண்டு கைகழுவி
                 குட்டை நிறைந்து
                       குழந்தை குஞ்சு குறித்தேறி
                 வாய்க்காலாய் ஓடி
                       வழிப்போக்கர் சந்திசெய்து
                 இஞ்சிக்குப் பாய்ந்து
                       இருவாட்சி வேரோடி
                 மஞ்சளுக்குப் பாய்ந்து
                       மருதாணி வேரோடி
                 தாழைக்குப் பாய்கையிலே
                      தளும்பினதாம் கண்ணீர்
                வாழைக்குப் பாய்கையிலே
                     வற்றினதாம் கண்ணீர்


         தாய்மை உள்ளத்தை எப்படி எல்லாம் கவியில் வடித்து இருக்கிறார் பாருங்கள். இதை எதோடும் ஒப்பிட்டு கூற முடியாது என்பதை கிராமத்துப் பாடல்கள் நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

         இதையே நமது சினிமா பாடல் எப்படி சொல்கிறது என்று நீங்களே கேட்டுத்தான் பாருங்களேன்.


பூங்காவியம் பேசும் ஒவியம் poongaviyam pesum oviyam. 

No comments:

Post a Comment