Saturday 14 March 2015

டாப்பு டூப்பு சினிமா செய்திகள்

              ஒரு சினிமா எடுப்பது என்பது மிக கடினமான வேலை. அப்பப்பா... பல குழுக்கள் ஒருங்கினைந்து கஷ்டப்பட்டு எடுப்பதுதான் சினிமா. அந்த படம் ஒடுவதும் ஒடாமல் இருப்பதும் கதையை பொறுத்துதான் அமைகிறு. ஆனால், சில பெரிய பெரிய நடிகர்கள் நடித்த படங்களை படம் வருவதற்கு முன் இவர் அப்படி நடித்திருக்கிறார் அவர் இப்படி நடித்திருக்கிறார் அப்டி இப்படி என்று டிவிலும், பத்திரிக்கையிலும் விளம்பரம் வரிசைக் கட்டி வாசிக்கிறது. அதே போல் படம் வெளிவந்ததும் நடிகரோடு படம் குழுவினர் பேட்டி கொடுப்பார்கள் பாருங்கள். படம் செம்மையா போகுது... 2 நாட்களில் 15 கோடியை தாண்டியது 30 கோடியை தாண்டியது என சொல்கிறார்கள்.


              ஒரு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, படம் பிளாப்பு பட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம், படத்தை வாங்கிய தியேட்டர்களுக்கு நஷ்டம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள் என்று பத்திரிக்கையில் செய்தி வருகிறது.
அத்தனை கோடி வசூலில் சாதனை செய்த படம் எப்படி கடைசியில் பிளாப் ஆனது? இதை விட கொடுமை என்னான்னா அந்த பிளாப் ஆனப்படத்துக்கு டிவி விருது கொடுப்பாங்க அதுவும் ஏதாவது காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார் அதற்குதான் இந்த விருது என்று சொல்வார்கள்.

            மக்களை முட்டாள் என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், இப்ப எல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் என்று சொல்லி நடிப்பவர்கள் தான் சரியாக ஒடுவதில்லை. சும்மா புதிதாக வந்து முதல் படத்தில் நடிப்பவர்கள் பணத்தை அள்ளிக்கொண்டு போகிறார்கள். படம் நூறுநாட்களை கடந்து ஒடி வசூலில் சாதனை செய்கிறது. ஆனால் இதுபோன்ற படங்களுக்கு விளம்பரம் அவ்வளவாக இருக்காது.

             இதில் இருந்து என்ன தெரிகிறது மொக்கையான படங்கள்தான் அதிகம் விளம்பர படுத்தப்படுகிறது விளம்பரத்தை பார்த்துவிட்டு மக்கள் செல்கிறார்கள் 2 நாட்களில் வசூலை எட்டுகிறது. படத்தை பார்த்த மக்கள் தனக்குத் தெரிந்தவர்களிடம் படம் மொக்கை என்று சொன்னதும் யாரும் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது இல்லை இதுதான் இப்போது நடக்கிறது.

            பணம் கைவசம் வைத்திருக்கும் நடிகர் படம் பிளாப் ஆனாலும் பரவாயில்லை என்று மியூசிக் டைரக்டரை கைகுள் வைத்துக்கொண்டு அவரே பாடி, அவரே தயாரித்து திரையில் அவரின் முகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறார். யூ டியூப்லயும், டுவிட்டர்லயும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதெல்லாம் தெரியாமலா இருக்கிறார்கள் மக்கள்.

            மக்களிடம் பணத்தை வாங்க அவங்க அவ்வளவு தந்திரம் செய்யும் போது பணத்தைக் கொடுத்து படம் பார்ப்பவர்கள் எப்படி எல்லாம் யோசிப்பார்கள். இதை நடிகர்கள் புரிந்து கொண்டாலே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தன் நடிப்பு திறனைக் காட்டி உண்மையான வெற்றியை பெற முடியும்.

No comments:

Post a Comment