Sunday 8 March 2015

தஞ்சாவூர் சமையல் / எண்ணெய் கத்தரிக்காய் பொறியல்

தேவையான பொருட்கள்: 

கத்தரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
கடுகு உளுத்தம்பருப்பு - சிறிது
மிளகாய்த்தூள் - சிறிது
உப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துறுவல் - சிறிது
எண்ணெய் - சிறிது


செய்முறை:

                பிஞ்சு கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவைகளையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

               இப்போது வாணொலியை அடுப்பில் வேத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி நறுக்கிய கத்தரிக்காயை நன்கு வதக்கவும். வதக்கிய பிறகு வேறொரு மாத்திக்கொண்டு. மீண்டும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, ஏற்கனவே வதக்கிய கத்தரிக்காயை அதில் கொட்டி கிளறி சிறிது உப்பு, சிறிது மளகாய்த்தூள், சேர்த்து கிளறவும் இப்போது தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.

            இப்போது சுவையான எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.

No comments:

Post a Comment