Wednesday, 18 March 2015

இந்த வார (மார்ச் 20-26) பாக்யாவில் என் கவிதை

இந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை...! பாக்யா இதழ் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்..!



இரத்த தானத்தில்
 மட்டும் ஒழிகிறது
 சாதி..!

 முள் வேலிக்குள் 
சிக்கிக்கொண்ட 
பட்டாம்பூச்சிகள்
 ஈழக்குழந்தைகள்..! 

விறகு இல்லாமலே 
எரிகிறது ஏழையின்
 வயிறு..! 

வானத்து நட்சத்திரங்கள்
 வனத்தில் மின்னுகிறது
 மின்மினி பூச்சிகள்..! 

இறந்து கிடக்கும் தீக்குச்சிக்கு
கண்ணீர் சிந்துகிறது
மெழுகுவர்த்தி..!

No comments:

Post a Comment