இணைய தளங்களிலும், காகிதங்களிலும் காணக்கூடிய செய்தி. செல்போன் டவரால் சிட்டுக்குருவி இனமே அழிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அறிவியல் சார்ந்தவர்கள் ஆராய்ந்து சொல்கிறார்கள் கவிஞர்கள் காகிதத்தில் சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும் சிட்டுக்குருவி அழிந்ததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.
உண்மையில் காடுகள் அழிக்கப்பட்டதால் தான் விலங்குகளும், பறவைகளும் அழிந்தது. நாம் ஏன் அழிந்தது? எப்படி அழிந்தது? என்று காரணத்தைக் கண்டுபிடிக்கின்றமே தவிர அதற்கான தீர்வை யாரும் சொல்வதில்லை. எங்கள் வீடு செல்போன் டவருக்கு அருகே ஒரு 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது அதாவது ஒரு 4-5 வீடுகள் தள்ளி இருக்கிறது. ஆனால் எங்க வீட்டு மரம், பூச்செடிகளில் சிட்டுக்குருவிகள் அமர்ந்து தேனெடுத்து செல்கிறது. கதிர்வீச்சால் சிட்டுக்குருவி அழிகிறது என்று சொல்லப்பட்டாலும் அது உயிர் வாழ போதுமான உணவு இல்லை மரம் செடிக்கொடிகள் இல்லை என்பதுதான் முக்கியமான ஒன்று.
சிட்டுக்குருவி அழியாமல் இருக்க மரங்களை வெட்டாமல் நாம் வீடுகளில் மரம் செடிகளை வளர்த்தாலே அது தானாக வளரும். சிட்டுக்குருவிக்கு அந்த உணவு அதற்கு எங்கே கிடைக்கிறதோ அங்கே அது இருக்கிறது இல்லாத இடங்களில் அது எப்படி இருக்கும்?
ஒரு பிச்சைக்காரன் பசியால் கையேந்தும் போது அய்யோ பாவம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தால் பசி தீர்ந்து விடுமா? காகிதத்தில் தேன் என்று எழுதி நக்கினால் இனித்திடுமா? "அம்மா... தாயே என்பதும், அய்யோ... பாவம் என்பதும் ஒன்றுதான்" பிச்சைக்காரனைவிட பிச்சைக்காரன் அய்யோ பாவம் சில்லரை இல்லை என்று ஒதுங்குபவன்தான். ஒரு இனத்தை அழித்து ஒரு இனம் வாழ்கிறது என்றால் அது மனித இனமாகத்தான் இருக்கும் .
ஆக, நாம் செய்ய வேண்டியதெல்லாம் கவிதையாய் காகிதத்தில் எழுதி அதற்காக பரிதாபப்படுவதை விட்டுவிட்டு வீட்டுக்கு வீடு சிறு தோட்டங்களை வளர்ப்போம் சிட்டுக்குருவி இனத்தை காப்போம்.
மார்ச் 20 உலக சிட்டுக்கருவி தினமாம் நான் எதார்த்தமாக பதிவு செய்தேன் அது சிட்டுக்குருவி தினமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி.
No comments:
Post a Comment