Tuesday 31 March 2015

இன்றைய கல்வி முறை

         இன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதில்லை இது ஒரு காரணம். அதோடு, மாணவர்களைக் தண்டிக்கூடாது கண்டிக்கக் கூடாது என்று கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தது அரசு. அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இல்லை.

              ஏனெனில் அது படிக்காத மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியரைக் கண்டால் மரியாதையும், பயமும் இல்லாமலே போய்விட்டது அப்படி இருக்கும் போது படிக்க வேண்டும் என்ற அக்கறை மாணவர்களுக்கு எப்படி வரும்? முன்பு ஆசிரியரைக் கண்டால் மதிப்பும், மரியாதையும் தானாக வரும் அதனால் படிப்பும் இயல்பாக வந்தது. முன்பு எத்தனைக் கஷ்டப்பட்டு படித்தாலும் மார்க் என்பது எட்டாக் கனியாக இருந்தது 10 வகுப்பில் பள்ளியில் 300 மார்க் எடுத்தால் பொதுத்தேர்வில் 250 அல்லது 200 தான் வரும் ஆனால் இன்று அரையாண்டு தேர்வில் இரண்டு மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவன் 400 மார்க் வாங்குகிறான் எப்படி?


             தனியார் பள்ளிகளோடு போட்டிப் போட அரசு அரசுபள்ளி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களை போடச் சொல்லி நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருந்தால் கல்வியின் தரம் எப்படி உயரும்? படிக்காத மாணவனுக்கு 50% மதிப்பெண்கள் வழங்கப்படும், சுமராக படிக்கின்ற மாணவனுக்கு 75% மதிப்பெண்கள் வழங்கப்படும், கொஞ்சம் நல்லா படிக்கின்ற மாணவனுக்கு 90% மதிப்பெண்கள் வழங்கப்படும். மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கண்ட படிப்பைத் தொடர மாணவர்கள் தரம் இல்லாமலே செல்கிறார்கள்.

          இந்நிலையில் இவர்கள் ஒரு டாக்டராகவோ அல்லது இன்ஜினியராகவோ சென்றால் என்னாகும்? இதனால் பாதிக்கப்பட போவது யார் மக்கள் தானே? இதே தரமான கல்வியைக் கற்று ஒரு ஆசிரியராக அல்லது கல்லூரி விரிவுரையாளராகச் சென்றால் என்னாகும் இவர் கற்றதே பாதியளவுதான் அவர் மாணவர்களுக்கு கால் பாதி தான் வகுப்பு எடுப்பார். இப்படிதான் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. படிப்பு பெரிதாக தெரிகிறது ஆனால் பயனுள்ளதாக இல்லையே. அந்த காலத்தில் 10 வகுப்பு படித்தவன் இந்த காலத்தில் மேற்படிப்பு படித்தவனுக்கு சமம். இப்போது எல்லோரும் ஒன்று சொல்லி வருகிறார்கள்

             அப்பப்பா... இந்த காலத்து புள்ளைங்க என்னம்மா பேசுறாங்க எல்லாம் தெரியுது அதுங்களுக்கு. எங்களுக்கு இந்த வயசுல எதுவுமே தெரியாது என்று பெருமைப்படுகிறார்கள். இதில் உண்மை என்னவென்றால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த நவீன வசதிகள் இருந்திருந்தால் அவர்களும் இப்படிதான் இருந்திருப்பார்கள்.

             இன்று பீகாரில் ஒரு செய்தி பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் காப்பியடிக்க உதவுவதற்கு நான்கு மாடிக்கட்டிடத்தில் ஜன்னல் வழியாக ஏறுகிறார்களாம். கல்வி எப்படி போகிறது பாருங்கள். நமது இந்தியாவில் வாட்ஸ்அப்பில் விடைகள் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இது முறையான செயலா? அதில் வரும் மதிப்பெண்களை வைத்து என்ன செய்ய முடியும் அந்த வேலைகளைச் செய்ய அவன் தகுதியான மாணவனாக வெளியே வந்து வேலை செய்ய முடியுமா? இதை ஏன் கல்வி நிர்வாகமோ, பெற்றோர்களோ புரிந்துகொள்வதில்லை.

              பள்ளி நிர்வாகம் வாங்கிய காசுக்கு மதிப்பெண்களை உயர்த்த நினைக்கிறது, பெற்றோர்கள் அதிக மதிப்பெண்கள் எப்படி வந்தாலும் சரி என்கிற ரீதியில் பார்க்கிறார்கள். இதில் யாருக்குமே எந்த பயனும் இல்லை என்பதுதான் உண்மை.

              2000 க்கு பிறகு கல்வியின் தரம் ரொம்ப குறைவு. 2000 ல் 1000 மதிப்பெண்கள் எடுத்தால் டீச்சர் டிரெய்னீங்க், 1100 மதிப்பெண்கள் எடுத்தால் இன்ஜினியரிங்க், 1150 எடுத்தால் டாக்டர் சீட்டு. 950 மார்க் எடுத்துவிட்டு டீச்சர் ரெய்னிங் இடம் கிடைக்காமல் ஒரு வருடம் காத்திருந்து பிஸ்எஸ்சியோ, பிபிஏ வோ, பி.காமோ எடுத்தவர்கள் ஏராளம். இப்ப அப்படியா? 500 மார்க் எடுத்த மாணவன் இன்ஜினியர், 800 மார்க் எடுத்தவன் டாக்டர். இவர்கள் எப்படி தரமானவர்களா வரமுடியும்? இப்போது படிப்புக்கு மரியாதை இல்லை பார்க்கின்ற வேலைக்கும் மதிப்பு இல்ல காரணம் தரமான கல்வி இல்லாததினால்தான்.

            கல்வி இன்று காய்கறி சந்தைமாதிரி ஆகிவிட்டது. வேலைவாய்ப்பு முகாமில் ஒவ்வொரு பட்டதாரியும் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு ஏமாற்றத்தோடு ஏறி இறங்குகிறான். "அந்த காலத்து கல்வி முறையும், இந்த காலத்து நவீனமும் ஒன்று சேர்ந்தால் நம்மைவிட புத்திசாலி இந்த உலகில் இல்லை." தரமான ஆசிரியர்கள் இருந்தால்தான் தரமான மாணவர்களை கொண்டு வர முடியும். முதலில் ஆசிரியர் மீது பயமும், மரியாதையும் இருந்தாலே தரம் தன்னால் வரும். அது இனி வருமா?

         கல்வி முறையில் ஒரு மாற்றம் வந்தால் 2030 ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று காத்திருக்க தேவையில்லை இப்போதே அடி எடித்து வைத்துவிடலாம். 

7 comments:

  1. arumaiyana padhivu unman than...

    ReplyDelete
  2. இன்றைய தேவை மட்டுமில்ல!...
    என்றைக்கும் இது தேவை!

    "வாழ்க்கைக்கு கல்வி" அவசியம்!-ஆனால்
    "கல்வி" மட்டுமே வாழ்க்கை ஆகாது!...

    மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல...
    வாழ்வும் அதோடு நிற்பதல்ல..
    தோல்விக்கு விலை உயிரல்ல.

    வெறும் எண்ணிக்கையால் உயர்ந்ததில்ல "வாழ்க்கை"
    நல்லெண்ணங்களால் உயர்ந்ததே "வாழ்க்கை"...

    தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயம் எல்லோருமே முதலிடம் பெற்றால்,அதில் என்ன பெருமை? எல்லோருமே டாக்டர், இன்ஜினியர்களானால், மற்ற வேலைகளை யார் செய்வது? படிப்புக்கேற்ப கல்லூரி, எதிர்காலம் எங்கேயும், எல்லோருக்கும் உண்டு. மதிப்பெண்குறைந்தாலோ, ஒரு முறை தோற்றாலோ தவறில்லை. அந்தத் தோல்வி தரும் வலியை, வெற்றியாக்கும்வெறி வேண்டும்.
    விலை மதிப்பில்லாதது... மீண்டும் வராதது உயிர் என்ற நினைப்பு... பெற்றோரும், பிள்ளைக்களும் எப்போதும், நினைவில் கொள்ள வேண்டும்....

    மாற்றத்திருக்கு வித்திடுவோம்!
    ஏற்றத்தை பெறுவோம்!

    எப்படி இருக்க வேண்டும் கல்வி ?

    படிப்பதை விதைப்பதைவிட்டு பிறர் படிக்க விதையாக...

    * நீ படிக்க விரும்பும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லையென்று நீ உணர்ந்தால், அத்தகைய புத்தகத்தை நீயே எழுத ஆரம்பித்துவிடு!

    -டோனி மாரிஸன் அவரின் கூற்றை மெய்யாக்குவோம்..

    ReplyDelete
  3. *இன்றைய கல்வி முறையின் அவல நிலை?

    *வெறும் எண்ணிக்கையால் உயர்ந்ததில்ல "வாழ்க்கை"
    நல்லெண்ணங்களால் உயர்ந்ததே "வாழ்க்கை"... என்பதை சொல்ல மறந்த இன்றைய கல்வி முறையால் ஆசிரியர்கள் வெறும் "calculator" ராக மாறிவிட்டன இவர்களின் பார்வையில் மாணவர்கள் ஒரு புள்ளி விவரங்களாகவே உள்ளனர்.

    இது 95, இது 90, இது 80, இது 60,இது தேராது....
    இத மாத்தி சொல்லணும் என்றால் A1,A2,B1,B2,C1,C2
    D, E1,E2 GRADE -இவ்வாறாக அடையாளும் காணும்

    கல்வியால் என்ன பயன்?

    *"கல்வியின் நிலை"!...

    அன்று:

    1947-12% கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு (மனிதநேயம்,அடுத்தவரை மதித்தல்,
    நேசித்தல்) இருந்தது. ("value education") மூலம்......
    பொது நலம் வளர்ந்தது....

    இன்று:

    2014-82% கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கை அதிகம் (மனிதநேயம்,அடுத்தவரை மதித்தல்,நேசித்தல்)என்பது கேள்விக்குறியாக மாறியது....("education is value") என்ற நிலை மாறியதால் சுயநலம் வளர்கிறது...

    நாளை:
    இந்த அவல நிலை!???.....

    *இந்த சமூகத்திற்கு தேவை
    மதிப்பெண் பெரும் 'குழந்தை' யை விட
    பிறரை நேசிக்கவும்,மதிக்கவும்....
    தெரிந்த குழந்தை தான்......
    மனிதன் படைத்த "ரோபோ" வை விட...
    "ரோபோ" வை படைத்த 'மனிதன்' தான் தேவை ......
    என்பதை உணர்ந்து,

    * விவேகானந்தரின் கூற்றுப்படி,

    கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர,
    வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல...

    ReplyDelete

  4. ‪#‎தன்னம்பிக்கையை‬ வளர்க்காத கல்வி எதற்கு?

    *நான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை
    என்று சொல்லிக்கொண்டு சோம்பேறியாக இருப்பதைவிட...

    *படிக்காமல் இருந்தாலும், தன் பிழைப்புக்காக யாரையும் சார்ந்து இல்லாமல்,தன் உழப்பேயை சார்ந்திருப்பதே சிறந்தது....

    *படிப்பது தன்னம்பிக்கையை வளர்த்துகொள்வதற்காக தானே தவிர...

    *"தன்"நம்பிக்கையை இழந்து அடுத்தவர் வேலை கொடுப்பார் என்று நினைத்து படிக்கும் படிப்பு
    வீண் தன்...

    *வேலையே தேடாதே!
    வேலையை கொடு!

    என்பார் காந்தியடிகள்....

    இதற்கு கல்வி முறையில் தன் மாற்றம் தேவை
    இல்லையேல் நம் இளைஞர்கள் அடைவார்கள்
    ஏமாற்றம்...

    இன்றைய கல்விமுறை என்பது "quality" இல்ல
    "quantity" உருவாக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை....

    படிப்பது எதற்காக?

    நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,""படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?''என்று கேட்டார். அதற்கு லிங்கன்,""நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படி பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

    ReplyDelete
  5. #"தோல்வி" என்பது நிரந்தரமில்ல"!

    "நடைபாதையில்" முதலில் நடக்கும் பொழுது தோல்வி

    "மிதிவண்டி" முதலில் கற்கும் பொழுது தோல்வி

    "தாய்மொழியை" முதலில் எழுதும்பொழுதும் தோல்வி

    "உணவை" முதலில் உண்ணும் பொழுதும் தோல்வி

    எல்லாவற்றிலும் முதலில் தோல்வி முதலில்

    தோல்வி ...........

    பின்பு ஏனடா...

    காதலிலும்,கல்வியிலும்,தொழிலிலும் மட்டும் முதல் தோல்வியை கண்டு உன்னை மாய்துகொல்கிறாய்,உன்னை நீயே.. தால்திகொள்கிறாய்,விபரம் அறியா வயதிலே முதல் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நீ....! எல்லாம் அறிந்துகொண்டபின்பு அதை ஏற்கமறுப்பது என்ன நியாயம்...... அதை கண்டு பயம் கொள்வதில் என்ன அர்த்தம்....

    "மூன்று எழுத்தின் ரகசியம்"....
    (வெற்றி...)

    "தேர்வு"அல்லது "போட்டி" என்பது
    மூன்று எழுத்து அதில் பங்கேற்க
    விரும்பும் "மனம்"மும் மூன்று எழுத்து
    இந்த மூன்று எழுத்துகளின் மூலம் கிடைக்கும்
    "முடிவு"வான "வெற்றி"தோல்வி" யும்..
    மூன்று எழுத்து தான்...-என்றாலும்
    ஏனோ! "மனம்" பங்கேற்க விரும்பவில்லை..
    "தோல்வி"என்ற "பய(ம்)"த்தால்......
    "போட்டி"யில் பங்கேற்கும் முன்பே
    தெரிந்தது தான் "முடிவு" என்றாலும்....
    அதை அறியாததைபோல......
    நம் "மனம்"தோல்வியை தாங்க முடியாமல்
    விலை மதிப்பற்ற மனித "உயிரை"விடவே
    துணிகிறதே தவிர........
    அதற்கு....- மாறாக.....
    "தோல்வி "யை "பணிவு"வோடு ஏற்று...
    விடா முயற்சியோடு "போராடினால்"...
    "வெற்றி" நிச்சயம்" என்பதை.......
    ஏனோ!....மறந்தது.....

    I Don't Care For Exam Bcoz A SingleSheet Of Paper Can't Decide My Future
    -thomas alva edison

    "நீ" படிப்பது சாதாரண செயலாக இருக்கட்டும்...
    "நீ" படைப்பது அசாதாரண செயலாக இருக்கட்டும்...
    என்பதை மறக்காதே!

    so dnt focus on 1st mark student only...
    all are equal to the society....

    all the best....

    ReplyDelete
  6. #"தோல்வி" என்பது நிரந்தரமில்ல"!

    "நடைபாதையில்" முதலில் நடக்கும் பொழுது தோல்வி

    "மிதிவண்டி" முதலில் கற்கும் பொழுது தோல்வி

    "தாய்மொழியை" முதலில் எழுதும்பொழுதும் தோல்வி

    "உணவை" முதலில் உண்ணும் பொழுதும் தோல்வி

    எல்லாவற்றிலும் முதலில் தோல்வி முதலில்

    தோல்வி ...........

    பின்பு ஏனடா...

    காதலிலும்,கல்வியிலும்,தொழிலிலும் மட்டும் முதல் தோல்வியை கண்டு உன்னை மாய்துகொல்கிறாய்,உன்னை நீயே.. தால்திகொள்கிறாய்,விபரம் அறியா வயதிலே முதல் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நீ....! எல்லாம் அறிந்துகொண்டபின்பு அதை ஏற்கமறுப்பது என்ன நியாயம்...... அதை கண்டு பயம் கொள்வதில் என்ன அர்த்தம்....

    "மூன்று எழுத்தின் ரகசியம்"....
    (வெற்றி...)

    "தேர்வு"அல்லது "போட்டி" என்பது
    மூன்று எழுத்து அதில் பங்கேற்க
    விரும்பும் "மனம்"மும் மூன்று எழுத்து
    இந்த மூன்று எழுத்துகளின் மூலம் கிடைக்கும்
    "முடிவு"வான "வெற்றி"தோல்வி" யும்..
    மூன்று எழுத்து தான்...-என்றாலும்
    ஏனோ! "மனம்" பங்கேற்க விரும்பவில்லை..
    "தோல்வி"என்ற "பய(ம்)"த்தால்......
    "போட்டி"யில் பங்கேற்கும் முன்பே
    தெரிந்தது தான் "முடிவு" என்றாலும்....
    அதை அறியாததைபோல......
    நம் "மனம்"தோல்வியை தாங்க முடியாமல்
    விலை மதிப்பற்ற மனித "உயிரை"விடவே
    துணிகிறதே தவிர........
    அதற்கு....- மாறாக.....
    "தோல்வி "யை "பணிவு"வோடு ஏற்று...
    விடா முயற்சியோடு "போராடினால்"...
    "வெற்றி" நிச்சயம்" என்பதை.......
    ஏனோ!....மறந்தது.....

    I Don't Care For Exam Bcoz A SingleSheet Of Paper Can't Decide My Future
    -thomas alva edison

    "நீ" படிப்பது சாதாரண செயலாக இருக்கட்டும்...
    "நீ" படைப்பது அசாதாரண செயலாக இருக்கட்டும்...
    என்பதை மறக்காதே!

    so dnt focus on 1st mark student only...
    all are equal to the society....

    all the best....

    ReplyDelete
  7. வணக்கம்., மிக நீண்ட ஒரு விளக்கத்தை மிக அழகாக தெளிவாக எடுத்துரைத்தீர்கள். இன்றைய கல்வியின் மீது உங்கள் தாக்கம் புரிகிறது. உண்மையை உரக்க சொன்னீர்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete