Friday, 20 March 2015

தஞ்சாவூர் சமையல்/ பொரிச்சக் குழம்பு

தேவையான பொருட்கள்:

 உருளைக்கிழங்கு - 2 
முருங்கைக்காய் - 1
 தக்காளி - 2
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 தேங்காய் - 1 மூடி
 மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
 மல்லித்தூள் - 1 கரண்டி 
சோம்பு - 1 ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப 
உப்பு - சிறிது


 செய்முறை:-

              காய்கறி, வெங்காயம், தக்காளி ஆகியவைகளை நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காயோடு சோம்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

           இப்போது பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி ஆகியவைகளை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். இப்போது காய்கறி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரத்திற்குப் பிறகு இறக்கவும்.

         இப்போது சுவையான பொரிச்ச குழம்பு ரெடி. இது சாப்பிடுவதற்கு கறிக்குழம்பு போல ருசி இருக்கும்.

         (இதில் கறி போட்ட கறிக்குழம்பு, முட்டையை ஆம்லெட் செய்து போட்ட முட்டை குழம்பு,)

No comments:

Post a Comment