Wednesday, 25 March 2015

சிவனே உனைத் தேடி வந்தேன்

சிவனே உனைத் தேடிவந்தேன்
சிங்கார நாயகனே உனைக் காணவந்தேன்
அன்பான தெய்வமே ஆதி சிவனே
 மனமிறங்கி வா.. வா.. என் ஈசனே
பாவம் போக்க உன் பாதம் தொடவந்தேன்
பாவி எனை ஆட்கொள்வாய் சிவனே

 ஒம் நமசிவாய எனும் பஞ்சாச்சர மந்திரத்தை
 நாளும் சொல்லி வந்தேன் சிவனே எந்நாளும் உனை மறவேன் மறவேன்
 என் சிந்தையில் நிறைந்த நித்தியானந்தா
 என் கருத்தில் கலந்த கருணாகரா வா.. வா.. உனைக் காணவேண்டும்
 உன் தவக்கோல அழகைக் காண மனம் ஏங்குதே...
 உடுக்கை நாதனே உணர்வில் உயிரான இசைப்பிரியனே கண்ணீர்மல்கி
 கரம் கூப்பி அழைக்கிறேன் கனநாதனே கண்ணெதிரில் வா.. வா..
 ஹர.. ஹர.. சிவா ஜம்போ மகாதேவா...

No comments:

Post a Comment