ஆடு
தின்னாப் பாலை இலையை நிழலில் உலர்த்திப் பொடியாகக் கத்தரித்துப்
புகையிலையில் வைத்துச் சுருட்டுச் சுற்றிப் புகைத்தால் சுவாசகாசம்
நிவர்த்தியாகும்.
இஞ்சிச் சாறும், மாதுளம் பூச்சாறும் சம எடை எடுத்து அத்துடன் தேன் கலந்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், சுவாசகாசம் குறையும்.
அரிசி திப்பிலி, அதிமதுரம் பொடி செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடிக்கக் காசம், சுவாசகாசத்தில் உண்டாகும் மூச்சிரைப்பு குணமாகும்.
தூதுவளை பழத்தைப் பறித்து அதிகக் காயும் இல்லாமல் அதிக பழமாகவும் இல்லாமல் நடுநிலையில் உள்ள தூதுவளைப் பழம் 50 ஐ சுத்தமான சாடியில் தேன் ஊற்றி அதற்குள் போட்டு பல நாள் மூழ்கியிருக்கும்படி செய்ய வேண்டும். பல நாள் மூழ்கியிருந்த பழத்தைக் காலையில் வெறும் வயிற்றில் 5 பழம் முதல் 10 பழம் வரை சாப்பிட்டு அதற்கு மேல் சூடான பசும்பால் குடித்து வந்தால் சுவாசகாசம் என்னும் ஆஸ்துமா நோய் குணமாகிவிடும்.
வாசகர்களே இவையாவும் நீங்கள் பயப்படாமல் சாப்பிடலாம் எந்த பக்கவிளைவும் இருக்காது. இவைகளை மருந்தாக பார்க்காமல் உணவாக பாருங்கள் சாப்பிடத் தோன்றும்.
ஆகா அருமையான தகவல்
ReplyDelete