Saturday, 6 December 2014

விந்தையான கணிப்புகள்

           நவீன அறிவியல, விண்வெளிப் பயணத்தில் பயணம் செய்வோர் அடையும் நிலைகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வுகளின் முடிவுகளின் முடிவுகள் புராணம் கூறும் கதைகளை நினைவுப்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறது. வானில் மிளிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஆராய்ந்து அதன் மகத்துவத்தை முன்னோர்கள் கண்டு அனுபவித்து கதை வாயிலாகவும், செவி வழி பரவும் செய்தியாகவும் கூறி இருக்கின்றனர்.

              27 நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரமான ரேவதியின் கதை ஆச்சர்யமான கதை!


            ரைவதன் என்ற மன்னனுக்கு பிறந்த பெண்ணின் பெயர்தான் ரேவதி. அவன் காலத்தில் மனிதர்கள் இன்று இருப்பதைவிட அதிக உயரத்துடன் இருந்தார்கள். தன் பெண்ணுக்கு ஏற்ற மணாளனைத் தேட ஆரம்பித்த ரைவதன் யாருமே சரியாக அமையாததால் மனம் வருந்தினான். இவளைப் படைத்த பிரம்மனையே நேரில் பார்த்த மணாளன் யார்? என்று கேட்டுவிடலாமே என்று அவனுக்குத் தோன்றியது. நேரே சத்திய லோகத்துக்கே தன் பெண் ரேவதியுடன் சென்றான்.

          அவன் பிரம்மலோகம் சென்ற சமயம் அங்கே ஒரு வேள்வி நடந்தது கொண்டிருந்தது. ஆகவே அது முடியும் வரை காத்திருக்க நேரிட்டது. வேள்வி முடிந்தவுடன் பிரம்மா, ரைவதனை அழைத்து விஷயம் என்ன? என்று கேட்டார்ரைவதன் தன் கவலையை வெளியிட்டான். பிரம்மா சிரித்தார்.

           மன்னனே ஏமாந்து விட்டாயே பூலோகத்தைப் பார் என்றார். அங்கே மனிதர்கள் மிகக் குறைந்த உயரத்துடன் அங்கும் இங்கும் போவதைக் கண்ணுற்ற மன்னன் "என்ன இது, இப்படி இருக்கிறது" என்று கேட்டான்.

            பிரம்மா கூறினார், "நீ இங்கே வந்தபோது பூமியில் கிருதயுகம் நடந்து கொண்டிருந்தது. நமது வேள்வி நடந்து முடிந்த இப்போதோ அங்கே கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு. இனி இவளை பூமியில் உள்ள எவரும் மணக்க முடியாது. 10 அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து இவளை மணப்பார். கவலைப்படாமல் செல் என்றார்.

            பிரம்மா சொன்னபடியே ரேவதியும் பலராமனை அவர் தன்னை கலப்பையால் தலையில் குட்டி உயரத்தைக் குறைத்த பின்னர் மணந்தாள். இவ்வாறு கதை முடிகிறது.

          ரேவதி தொகுதி மீனைப்போலத் தோற்றமளிப்பது வானியலில் Zeta piscum என்று குறிப்பிடப்படுகிறது. ரேவதி பற்றி ஜோதிட நூல்கள் செல்வம் மற்றும் வளத்தைக் குறிக்கும் நட்சத்திரம் என்று புகழ்கின்றன. இறை நம்பிக்கையுடன் இந்த நட்சத்திரம் இணைத்துப் பேசப்படுகிறது.

          பராசக்தியின் கருவாக இது குறிக்கப்படுவதால் ஆரம்பத்தையும் முடிவையும் இது குறிக்கிறது. நல்ல பயணம் ஆரம்பிப்பதற்கு ரேவதியே உகந்தது. தொலைந்து போன பொருளை ரேவதியில் தேடினால் கிடைக்கும் சக்தியை தரும் இதை க்ஷரத்துடன் பாலுடன் ஒப்பிட்டு பேசுவர்.

          மீன ராசிக்குரிய நட்சத்திரம் ரேவதி. இசை, நடனம், நாடகம், இலக்கியம் இந்த நட்சத்திரத்திற்கு தண்ணீர் பட்ட பாடு.

          ஐன்ஸ்டீனின் ஜாதகத்தில் சுக்ரன் ரேவதியில் இருக்கிறது. அவர் சுக்ர தசையின் போதுதான் 'தியரி ஆஃப் ரிலேடிவிடி' யைக் கண்டுபிடித்தார்! மார்லன் பிராண்டோ தாகூர் போன்ற பிரபலங்களின் நட்சத்திரம் ரேவதி!

        எல்லாவற்றையும் விட அறிவியலையும், புராணத்தையும் நெருங்கிவரச் செய்யும் நட்சத்திரங்களுள் முதன்மையானது ரேவதி.

         என்ன வாசகர்களே நீங்கள் ரேவதி நட்சத்திரமா அப்ப ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள்!

2 comments: