Friday, 5 December 2014

கொஞ்சம் குறும்பு கொஞ்சம் குசும்பு

       
பெரும்பாலும் பழைய சினிமாவில் ஒரு வசனம் எல்லா படங்களிலும் வரும் அந்த வசனம் என்ன தெரியுமா? "ஒரு மரத்தில் படர்ந்த கொடி வேறொரு மரத்தில் படராது" என்று வரும் இதை எல்லோருமே கேட்டுருப்பீர்கள் இல்லையா?

         அது உண்மையா எனக் கண்டறிய நான் ஒரு வேலை செய்தேன். எங்க வீட்டில் காவள்ளி என்ற ஒரு கொடி இது கிழங்கு வகையை சார்ந்தது வெற்றிலை கொடிபோல் அழகாக பரடரும். அந்த கொடியின் ஓரத்தில் ஒரு கம்பை வைத்திருந்தேன் அதில் அந்த கொடி படர்ந்து இருந்தது. நான் அந்த கம்பை எடுத்துவிட்டு, இன்னொரு கம்பில் அந்த கொடியை எந்த சேதாரமும் செய்யாமல் சுற்றி வைத்துவிட்டேன்.


         ஆனால் அந்த கொடி படவில்லை படர்ந்துதான் இருக்கிறது. ஆக அந்த வசனத்தை நான் பொய்யாக்கிவிட்டேன். இதிலிருந்து என்ன தெரிகிறது, ஒரு மரத்தில் ஒரு கொடி படர்ந்தால் அந்த மரத்தையோ அல்லது கொடியையோ வெட்டி விட்டால்தான் படர முடியாமல் போகும். அந்த கொடியை எடுத்த மாதிரி வைத்துவிட்டால் அது வளரும் என்பது உண்மை. 

         அந்த காலத்தில் ஒருவரை நினைத்துவிட்டால் வேற ஒருவரை நினைக்க மாட்டார்கள் ஆனால் இந்த காலத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் இந்த கொடியும் இந்த காலத்திற்கு தகுந்தார்போல் மாற்றிக்கொண்டதோ..!

         அந்த வசனத்திற்கு வேறு காரணம் இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

6 comments:

  1. எனக்கு எதுவும் தெரியவில்லை.
    பதிவு ரசளையாக உள்ளது.
    நல்ல ஆராய்வு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியவில்லையா? என்ன சகோதரி இப்படி சொல்லிவிட்டீர்கள். ஹா.. ஹா.. தங்க வருகைக்கு நன்றி!

      Delete
  2. climbers "don't" survive without "a" support, that is the dialogue, not the way you have interpreted.

    ReplyDelete
  3. தங்கள் தாவரவியல் ஆய்வு அருமை
    கிரிகர் ஜோகனுக்கு பிறகு நீங்கதான் ...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா... தங்கள் வருகைக்கு நன்றி

      Delete