Sunday, 21 December 2014

சைனிஸ் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு : 3 கப்
முட்டை கோஸ்: 100 கிராம்
கேரட் : 1
பீன்ஸ்: 100 கிராம்
தக்காளி: 1
வெங்காயம்: 50 கிராம்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் : 1 
சர்க்கரை : 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு : சிறிதளவு



செய்முறை:-

         கோதுமை மாவை நன்றாக பிசைந்து வைத்து விடுங்கள் 1/2 மணி நேரம் ஊரட்டும். பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

          அடுப்பில் வானலியை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு சிவக்க வதக்கி நறுக்கிய காய்கறிகளை கொட்டி சிறிது மிளகாய்த்தூள் சிறிது உப்பும், சர்க்கரையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இப்ப அது கிரேவி பதத்தில் இருக்கும். இறக்கி வைத்துவிட்டு.

         பிசைந்த கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாதி கட்டையில் தேய்த்து, தோசைக்கல்லில் சிறுதி எண்ணெய் ஊற்றி சாப்பாதிகளை சுட்டு அதை ஒரு தட்டில் வைத்து அந்த கிரேவியை சப்பாதியில் தடவி ரோல் பண்ணி இரண்டாக வெட்டி வைத்து பரிமாறவும்.

               இது ரொம்ப சத்தானது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் காரம், இனிப்பும் கலந்த ஒரு தனி சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இந்த காய்கறிகளை பொறியல் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்களா? அதை இப்படி செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.




No comments:

Post a Comment