Thursday, 18 December 2014

தஞ்சாவூர் சமையல் / சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - தேவைக்கேற்ப
தேங்காய் - 1 கப்
பூண்டு - 1 பெரியது
இஞ்சி - 2 துண்டு
மிளகு - சிறதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை, கசகச - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 செய்முறை:-

            சிக்கனை துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், சோம்பு, மிளகு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.

          அடுப்பில் பாத்திரத்தை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, கசகச ஆகியவற்றை போட்டு வதக்கவும் அதன் வெங்காயம், தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுதுகள், கறிவேப்பில்லை போட்டு நன்றாக மணம் வரும் வரை வதக்கி அதோடு சிக்கனை கொட்டி கிளறி வேக வைத்து சிறிது நேரத்திற்கு பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவைகளை போட்டு தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

           நன்றாக கொதித்து வந்தவுடன் அரைத்த தேங்காயை கொட்டி கிளறி சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து இறக்கி கொத்தமல்லி இலைகளை தூவி சிறிது எலுமிச்சையை பிழிந்து ஊற்றி மூடவும்.

           இப்போது சுவையான, மணமான சிக்கன் குழம்பு ரெடி..!

 ( இன்னும் கொஞ்சம் சுவைக்கூட்ட டால்டாவையும் சேர்த்துக்கொண்டால் சூப்பராக இருக்கும். சாப்பிட்டு முடிந்த பின்னும் நாக்கில் ருசியும், கையில் மணமும் அப்படியே இருக்கும்)

No comments:

Post a Comment