Thursday 25 December 2014

பொதுச்சேவையில் சினிமா பிரபலங்கள்

             பொதுச் சேவை என்பது மகத்தான ஒரு சேவை. கருணை என்றாலே நம் நினைவுக்கு வருவது அன்னை தெரசா. இல்லாதவர்களுக்கு உதவுவதும், கொடுப்பதும் எல்லோருக்கும் அந்த மனம் இருப்பதில்லை அந்த மனம் ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது. இல்லாதவர்களை கண்டு பரிதாபம் கொள்வதோடு பாதிபேர் சென்று விடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு கொடுத்து உதவுவது ஒரு சிலர்தான்.

            அந்த வரிசையில் இப்போது சினிமா பிரபலங்கள் சேவை செய்து வருகிறார்கள் இது வரவேற்க தக்க விஷயம். சில நடிகர்கள் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை அடைகாத்துக் கொண்டு அவர்களுக்காக உயிரைக்கொடுக்கும் ரசிகர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் ஏழை எளியவர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் நான் எளிமையானவன் எளிமையானவன் என்று சொல்லிக்கொள்ளாமல். நடிகர்களை விட குறைவாக சம்பளம் வாங்கி குறைந்த படங்களில் மட்டும் நடித்து அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவும் நடிகைகளுக்கு பெரிய மனதுதான். அந்த நடிகைகளை நாம் பாராட்டதான் வேண்டும்.


            அந்தவகையில் பெண்களுக்காக போராடும் நடிகை ரேவதி, சுஹாசினி,

நடிகை அமலா ப்ளுகிராசில் இருந்திருக்கிறார் நிறைய இரக்க குணம் உடையவர். ஒரு முறை காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது சாலையில் கிடந்த நாய்குட்டியை கையில் தூக்கிக் கொண்டு போய் அருகில் இருந்த கடைக்காரரிடம் அந்த நாய்குட்டியை எப்படி வளர்க்க வேண்டும் எத்தனை தடவை ஊசிப்போட வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்யிருக்கிறார். நாம் என்றால் அடித்து விரட்டுவோம் இல்லையென்றால் கண்டுக்காமல் செல்வோம்.

              நடிகை ஹன்சிகா தன்னுடைய பிறந்த நாள் அன்று ஏழை எளிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதற்கு பெரிய மனம் வேண்டும் அந்த மனம் அவருக்கு இருக்கிறது. உண்மையில் இது மிகப் பெரிய விஷயம்.

             நடிகை சமந்தா இவர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக பிரதியுஷா பவுண்டேஷன் ஆரம்பித்திருக்கிறார் இதில் மூன்று டாக்டர்கள் சேவையாற்றி வருகிறார்கள். புற்று நோய் மற்றும் ஹீமோபிலியா தாலசிமியா ஆகிய நோய்களுக்கு பார்க்கப்படுகிறது. இதற்கு அவர் எந்த நன்கொடையும் வெளியில் இருந்து பெறவில்லை தனது வருமானத்தில் இருந்தே செலவு செய்து வருகிறார் சமந்தா.

             அந்த வரிசையில் ஸ்ரேயா, த்ரிஷாவும் சேவை செய்து வருகிறார்கள். நடிகைகள் அதிகபட்சம் நடிப்பது ஒரு 25 படங்கள் இருக்கலாம் அவர்களுக்கு உதவி செய்ய மனம் இருக்கிறது. ஆனால் 25 வருடங்களில் 100 படங்களுக்கு மேல் நடிக்கும் சில நடிகர்களுக்கு கொடுப்பதற்கு மனம் இல்லை இதில் எளிமையானவன் என்று சொல்லிக்கொள்வதில் என்ன இருக்கிறது. உடையில் மட்டும் எளிமையை காட்டி என்ன பயன்.

           அதிகம் வைத்திருப்பவர்களைவிட குறைவாக வைத்திருப்பவர்களுக்குதான் கொடுக்க வேண்டுமென்ற மனம் இருக்கிறது.

No comments:

Post a Comment