Sunday, 28 December 2014

தஞ்சாவூர் சமையல் /மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:-

மீன் - 1/2 கிலோ
மிளகாய்தூள் - தேவையான அளவு
தனியா தூள் - தேவையான அளவு
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஸ்பூன்
வெந்தையம் - சிறிதளவு
தேங்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிது


 செய்முறை :-

                மீனை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், சீரகம், 5 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவைகளை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

            இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் போட்டு சிவக்க வதக்கி அதோடு சின்ன வெங்காயம் போட்டு வதக்கிய பிறகு கறிவேப்பிலை சேர்த்து பச்சை மிளகாய், தக்காளி ஆகியவைகளை போட்டு புளிகரைசலையும் ஊற்றி மிளகாய் தூள், தனியாதூள் கொஞ்சம் உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

            கொதிவந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து அதன் பிறகு அரைத்த தேங்காயையும் சேர்த்து மூடவும். சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும். (தேங்காய் சேர்க்காமலும் வைக்கலாம் அதுவும் நன்றாகதான் இருக்கும் தேங்காய் சேர்ப்பது ஒரு அடர்த்திக்காகதான்)

         இப்போது சுவையான மீன் குழம்பு ரெடி.

2 comments:

  1. irandavadhu naal kuzhambu idly ku nalla irukkum veluthu vangalam ippadikku saapaattu Raaman

    ReplyDelete
    Replies
    1. மீன் குழம்பும், நாட்டுக்கோழி குழம்பும் மறுநாள்தான் இன்னும் கொஞ்சம் சுவையா இருக்கும் உண்மைதான்.

      Delete