2014 இந்த வருடம் ஆரம்பம் என்னவோ எனக்கு அமர்க்களமாகதான் இருந்தது. ஆனால் போகபோக ஏனோ நிறைய மனக்கஷ்டத்தை தந்தது. நாம் கடந்து வந்த பாதைகள் அனைத்தும் பசுமையாக இருப்பதில்லை. சில இடங்கள் குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும், பாலைவனமாகதான் இருக்கிறது.
ஒவ்வொரும் தான் வந்த பாதைகளை திரும்பி பார்த்தால் சந்தோஷங்களை விட சங்கடங்களே அதிகம் இருக்கும். ஆனால் நான் வந்த பாதைகளில் மலர்களைவிட முட்களே அதிகம் இருந்தது. அந்தவகையில் 2014 ல் ஒரு சந்தோஷம் என்னவென்றால் இந்த வலைப்பூவை ஆரம்பித்ததுதான். மனதில் உள்ளதை எழுத்தில் வடிக்கலாம் அதை இந்த இதய சுவட்டில் பதிக்க நினைத்தேன். ஒரு நீண்ட பாலைவனத்தில் சிறு நீர் ஊற்றுப்போல், இந்த வலைப்பூ எனக்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது.
எனது கிறுக்கல்களை மனம் உவந்து வாசித்து செல்லும் இனிய வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் ஏனைய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்!
இந்த 2015 ல் எல்லோருக்கும் நல்ல ஆண்டாக அமைய, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க இறைவன் துணையாக இருக்கட்டும்.
அனைவருக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
puthaandu vaazhthukkal sagodhari.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteதங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteவாழ்க வளமுடன். இனி திரும்பிப் பாக்காதீங்க, நேராப் பாருங்க, இல்லைன்னா ஆக்சிடன்ட் ஏதாச்சும் ஆகிடப்போகுதுங்க.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஇந்த ஆண்டு மட்டும் அல்ல
ReplyDeleteஇனி வரும் ஆண்டெல்லாமே சிறப்பான
ஆண்டாகவே நிச்சயம் அமையும்
வாழ்த்துக்களுடன்....