Tuesday, 30 December 2014

தஞ்சாவூர் சமையல் / நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:-

நண்டு - 1/2 கிலோ
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
முழு பூண்டு - 1
தேங்காய் - 1 மூடி
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
தனியாத்தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையானளவு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
 செய்முறை:-

                    நண்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், சோம்பு, மிளகு, பூண்டு ஆகியவைகளை அரைத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

               இப்போது கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி ஆகியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும் அதன்பிறகு சுத்தம் செய்த நண்டையும் சேர்த்து வதக்கி சிறிது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிறிது உப்பு சேர்த்து புளிகரைசலையும் ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அரைத்த தேங்காயை போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி பரிமாறவும்.

         இப்போது சுவையான நண்டு குழம்பு ரெடி.

(குழம்பு மணமாக இருப்பதற்கும், சுவையாக இருப்பதற்கும் தாளிப்பதும், அதற்கு சேர்க்கும் சேர்மானங்கள்தான். சிலர் எல்லா குழம்பிற்கு ஒரு பொருட்களை  கொண்டு தாளிப்பார்கள் அப்படி செய்யக்கூடாது. மீன் குழம்பிற்கு ஒரு மணம், நண்டு, இறால், கறி, என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு மணம் இருக்கிறது.


  • மீன் குழம்பிற்கு வெந்தயம் தாளிக்க வேண்டும். 
  • நண்டு, இறால், கறி இவைகளுக்கு சோம்பு தாளிக்க வேண்டும். 
  • சாம்பார், ரசம், பொறியல் இவைகளுக்கு கடுகு தளிக்க வேண்டும். 
  • சாம்பார் மணமாக இருக்க தேங்காயோடு சீரகத்தை அரைத்து சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment