பாலியல் வன்முறைகள் ஆங்காங்கே நடக்கிறதே என்று ஆதங்கப்படும் பெண்களா நீங்கள்? நமது தங்கையோ? அக்காவோ? குழந்தைகளோ? எப்படி பயமில்லாமல் அனுப்புவது என்று கவலைப்படும் பெண்களா நீங்கள்? காம கொடூரங்களைக் கண்டு கொந்தளிக்கும் சமூக அக்கறையுள்ள பெண்களா நீங்கள்? வாருங்கள் ஒன்றாக இணைந்து ஆபாச ஆசாமிகளை வளைத்துப் பிடித்து வேறோடு அழிப்போம்.
இது எப்படி சாத்தியம் ஆகும் என்கிறீர்களா? ஆகும். முடியாதது உலகில் எதுவும் இல்லை. அதற்கு துணிவும், தன்னம்பிக்கையும் வேண்டும். எட்ஸ்க்கு வரும் முன் காப்போம் என்கிறார்கள். சர்க்கரை, காலரா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை தடுக்க அரசு பல வழிகளை கையாண்டு அதை ஒழிப்பதற்கும், அழிப்பதற்கு பல் வேறு முயற்சிகள் செய்து தடுத்தும், ஒழித்தும் விட்டது. அதே போல் பாலியல் வன்முறைகள் செய்யும் ஆண்களைத் தடுக்க இந்த அரசு ஏன் தடுக்க ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை? சரி எங்காவது குற்றங்கள் நடக்கப் போகிறது என்றால் முன்னேற்பாடாக பாதுகாப்பு கொடுக்கும் காவல் அதிகாரிகள் இது போன்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றி விசாரித்து என்ன பயன்? பாலியல் வன்முறைகளை தடுக்க இதற்கென்ற ஒரு அமைப்பை அரசு ஏன் உருவாக்க கூடாது.
சரி, எப்படி ஆபாச ஆசாமிகளை கண்டுப்பிடிப்பது? கண்டிப்பாக இணையதளங்களில் உலா வரும் பெண்களுக்கு ஆபாச ஆசாமிகளால் தொந்தரவுகள் நிறைய இருக்கும். முக்கியமாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவைகளில் வரும் பெண்களுக்கு நிறைய தொல்லைகள் இருக்கிறது. அந்த பெண்கள் இது போன்ற ஆட்களை ஈசியாக பொறி வைத்து பிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
மேலும், பேஸ்புக்கில் ஆபாச பக்கங்கள் வைத்திற்கும் நண்பர்களை முதலில் போலிஸ் கைது செய்ய வேண்டும். அடுத்து, வலைப்பூக்களில் ஆபாச பதிவுகள் இடும் நபர்களையும் கைது செய்ய வேண்டும். இணைய தளங்களுக்கு தணிக்கை இட அரசு உத்தரவிட வேண்டும். ஆபாச பேச்சும், ஆபாச பதிவிடும் ஆண்கள் கண்டிப்பாக சபலபுத்தி உள்ள ஆண்களாகதான் இருக்கும் இவர்கள் எப்படியும் ஏதாவது ஒரு பெண்ணை நாசம் செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள். இவர்களை இலகுவாக நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அப்படியிருக்க காவல்த்துறை அதிகாரிகள் கண்டிப்பிடிக்க கஷ்டமே கிடையாது. ஆனால், இதுப்பற்றி அவர்கள் சிந்திக்காமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
சரி போகட்டும் இது போன்ற ஆசாமிகளை பொறி வைத்து பிடித்தால் பாலியல் வன்முறைகளை கொஞ்சமாவது தடுக்கலாம். அதற்கு பெண்கள் துணிந்து முன் வரவேண்டும் வருவார்களா? வந்தால் நாளைப் பெண்கள் வீதியில் பயமில்லாமல் தனித்து செல்லலாம்.
இப்படி துணிந்து வரும் பெண்களுக்கு காவல்த்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். அளிக்குமா? இதுபோன்ற ஆசாமிகளை பிடிக்க, தகவலை காவல் நிலையத்தில் கொடுக்க புகார் எண்களோ, ஈமெயில் முகவரி எங்களுக்கு வேண்டும். இதைப் படிக்கின்ற சமூக அக்கறையுள்ள அமைப்புகள், காவல்துறை அதிகாரிகள் இதற்கு உதவி செய்ய வேண்டும் என்பது சிறு வேண்டுகோள்.
குற்றங்கள் நடப்பதற்கு முன் தடுத்துவிட்டால் யாரும் கஷ்டப்பட தேவையில்லை நடந்து முடிந்த பின் வருந்தி பயனில்லை. மானமும், உயிரும் போனால் திரும்ப வராது. அதற்கு ஒரு ஆபத்து வருமெனில் நாம் தடுப்பது அவசியம். இதற்கு பெண்களாகிய நாம்தான் நம்மை காத்துக்கொள்ள முன் வரவேண்டும் நாம் தருகின்ற தகவலை வைத்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் ஒரு விடிவு பிறக்கும். இணையதளத்தில் இதைப்படிக்கின்ற நேர்மையான காவல்துறை அதிகாரிகள் உதவி செய்ய வேண்டுகிறேன்.
தாய்நாட்டை காக்கின்றவன் சிறந்த குடிமகன். பெண்ணின் மானத்தை காக்கின்றவன் மானமுள்ளவன். ஒரு இராணுவ வீரன் தாய்நாட்டை காக்க எல்லையில் காவல் காக்கிறான். காவல்துறை நாட்டுக்குள்ளே நடக்கின்ற குற்றங்களைத் தடுக்க காவல் காக்கிறது. ஊர்களில் தவறுகள் நடக்காமல் இருக்க எல்லைதெய்வங்கள் காவல் காக்கிறது. பெண்களை காவல் காக்க பெண்களே காவல் தெய்வங்களாவோம். வாருங்கள்..!
சமூக அக்கறையுள்ள பெண்கள் எனது ஈமெயில் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம். ssrichandra5@gmail.com

No comments:
Post a Comment