அன்று...
நீ எல்லையை கடந்து
மேகத்தில் நுழைந்து
காற்றை கிழித்து
என் இதயத்தில் குடிபுகுந்தாய்..!
சிந்தையில் நிறைந்தாய்
கருத்தில் கலந்தாய்
பார்வையில் விழியானாய்
ஊண் உறக்கம் எல்லாவற்றிலும்
நீயானாய்..!
உறங்காத இரவுகளில்
துணையாய்
விடியலுக்குமுன் துயிலெழுப்புவாய்
தொலைதூர பயணத்திற்கு
வழித்துணையானாய்
நாளெல்லாம் என்னோடு
பயணத்தியாய்
பேசாத நாட்களில்
நினைவானாய் - ஆனால்
இன்று...
சண்டையிட்ட சிறுகுழந்தையாய்
முகத்தை திருப்பிக்கொண்டு
நீயும் நானும்
தொலைதூரத்தில்..!
நீ எல்லையை கடந்து
மேகத்தில் நுழைந்து
காற்றை கிழித்து
என் இதயத்தில் குடிபுகுந்தாய்..!
சிந்தையில் நிறைந்தாய்
கருத்தில் கலந்தாய்
பார்வையில் விழியானாய்
ஊண் உறக்கம் எல்லாவற்றிலும்
நீயானாய்..!
உறங்காத இரவுகளில்
துணையாய்
விடியலுக்குமுன் துயிலெழுப்புவாய்
தொலைதூர பயணத்திற்கு
வழித்துணையானாய்
நாளெல்லாம் என்னோடு
பயணத்தியாய்
பேசாத நாட்களில்
நினைவானாய் - ஆனால்
இன்று...
சண்டையிட்ட சிறுகுழந்தையாய்
முகத்தை திருப்பிக்கொண்டு
நீயும் நானும்
தொலைதூரத்தில்..!
No comments:
Post a Comment