Sunday, 30 August 2015

நேற்று வரை நீயும் நானும் இன்று யாரோ?

அதிகாலை குளிரில்
இழுத்துப் பிடித்து
போர்த்தும் போர்வையானேன்..!

அந்த சிறு உறக்கத்தை
கெடுக்கும் கனவானேன்
எழுந்ததும் நீ இதழ் வைத்து
சுவைத்து பருகும் டீ யானேன்..!

உனக்கு காலை உணவானேன்
உனது அலுவலக வேலையில்
அடிக்கடி வந்துபோகும்
கோப்புகளானேன்..!

உனது மனதை யாரேனும்
காயப்படுத்தும் போது
ஆறுதலானேன்
எங்கோ வெளியூர் செல்கையில்
வழித்துணையானேன்..!





இரவில் உறக்கமில்லாமல்
துவண்டபோது பேச்சுத்துணையானேன்
தூக்கத்தின் நடுவில்
விழித்தெழும் போது
உன் நினைவுக்கு வரும்
முதல் ஆளானேன்..!

இவையாவும் நேற்றுவரை
இன்று...ஏனோ? உனக்கு
நான் கசப்பு மருந்தானேன்
பேச மறுக்கும் மொழியானேன்..!

இன்று இனிப்பது  ஒருவேளை
நாளை புளிக்கும் யார்கண்டார்கள்?
அப்போது நீ அழுதால்
உனக்காக நான் வருவேன்..!

ஏனெனில்?
எனதன்பு எப்போதும்
உனக்காக காத்திருக்கும்
விழிவழியில் பூத்திருக்கும்..!



No comments:

Post a Comment