ஒரு குட்டி கதை உங்களுகாக:
ஒரு காட்டுல குயிலும், மைனாவும் நீண்ட காலமாக நண்பர்களா இருந்தாங்க. இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிற நல்ல நட்பு அவர்களிடம் இருந்து. மற்றவர்கள் பொறாமை படும் அளவுக்கு. ஒரு நாள் அதற்கும் சோதனை வந்தது அன்றாடம் வழக்கமாக பேசிக்கொள்ளும் இவர்களுக்குள் ஏனோ சிறு இடைவெளி விழுந்தது. குயிலின் பேச்சு குறைந்தது.
குயிலின் மாற்றத்தைக் கண்ட மைனாவுக்கு சிறு வருத்தம் ஏற்பட்டது. ஏனென்றால் மைனாவுக்கு குயிலின் மீது கொள்ளை பிரியம் உண்டு. அன்பு அதிகமானாலே சின்ன சின்ன கோபங்கள் வருவது இயல்புதானே? இதுபோல் அடிக்கடி இவர்களுக்குள் நடப்பதுதான். அந்த கோபத்தில் மைனாவும் பேசுவதை நிறுத்திக்கொண்டது.
நட்பில் விட்டுக்கொடுக்கலாம் விட்டுபிடித்தல் இருக்க கூடாது. ஆனால், இருவரும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்பதால் நாட்கள் மாதங்களாக நீண்டு கொண்டே போனாது. ஆனால் மைனாவுக்கு கோபம் இருந்தாலும் ஒரு நாளும் நினைக்கத் தவறியதே இல்லை.
ஒரு நாள் குயிலின் சிந்தனை ஒன்றை மைனாவுக்கு கேட்க நேர்ந்தது. குயில் சொன்ன விஷயங்கள் தனக்கு சொன்னது போல் உணர்ந்தது. முதலில் பேசாமல் முறைத்துக்கொண்டு நின்றது தான் தான் என்பதால். அந்த வாக்கியங்கள் மனதில் அடிக்கடி வந்து துன்புறுத்தவே வேறு வழியில்லாமல். தானாக முன்வந்து குயிலிடம் மன்னிப்புக் கேட்டது. ஆனால், அதற்கு குயில் கேட்டது பாருங்கள் " ஏன்?" என்று.
மைனாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் விக்கித்து நின்றது.
பின்குறிப்பு:-
குயில் "ஏன்" என்று கேட்டதற்கு என்ன காரணம்? மைனா விக்கித்து நின்றதற்கு என்ன காரணம்?
உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

No comments:
Post a Comment