Sunday, 23 August 2015

உன்னால் முடியும் வாங்க சாதிக்கலாம்

                  அப்துல் கலாம் கடைசியாக சொன்ன வார்த்தை டிவி பார்க்காதீர்கள் வீட்டுக்கொரு நூலகம் அமையுங்கள் என்றார். அவரின் கனவை நினைவாக்குவோம் என்று பலர் வாக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் அவர் சொன்னதை கொஞ்சமாவது கடைப்பிடித்தீர்கள்?


                   நான் டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் ஓய்வு நேரங்களில் புத்தகம் படிப்பது, ஒவியம் தீட்டுவது, மரச்செடியை நடுவது என செய்துக்கொண்டு இருக்கிறேன். படிக்கின்ற போது இந்த பழக்கம் எனக்கு ஏற்கனவே இருந்ததுதான் ஆனால் டிவி பார்க்க தொடங்கிய  பிறகு மற்ற வேலைகள் எல்லாமே முடங்கி போனது. இப்போது மீண்டும் ஒரு புத்துணர்ச்சி கிடைத்திருக்கிறது டாக்டர். அப்துல் கலாமினால்.

                   இந்த நாட்டுக்கான பங்கை அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திவிட்டு அப்துல்கலாம் சென்றுவிட்டார். நாம் வாழ்ந்த காலத்தில் நாம் என்ன செய்தோம் என்ன செய்ய போகிறோம் என்று சிந்திப்போம். மனிதன் பொறாமை படாத ஒரே ஒரு விஷயம் மரணம் மட்டும்தான் அதையும் பொறாமை பட வைத்த மனிதர் அவர். வாழ்ந்தால் அவர் போல் வாழ வேண்டும் வீழ்ந்தால் அவர் போல் விழவேண்டும்.



                   அவரைப் போன்று எல்லோராலும் வாழ்வது முடியாது ஆனால் சில விஷயங்களை கடைபிடிக்க செய்யலாம். கெட்டவன் என்று பெயரெடுத்து சாவதைவிட உத்தமன் என்று பெயரெடுத்து சாவோமே... நாம் இறக்கும்போது எல்லோரும் சொல்கின்ற ஒரு வாக்கியம் பாவம் நேர்மையான மனிதர் நல்ல மனிதர் என்ற வார்த்தைதான் நாம் கடைசியாக கொண்டு செல்கிறோம் வேற எதையும் அல்ல, இதற்காக நாம் எதையும் இழக்கலாம்.

             என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே நமக்குத் தெரிந்த வழிகளில் நாம் சாதிக்க நினைத்தால் நிச்சயம் வெற்றிக் கிடைக்கும் பேரும் புகழும் நம்மைத் தேடிவரும்.


2 comments: